தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமைதி நோபலும் டிரம்ப் கூப்பாடும்!

13 Oct 2026, 10:28 pm
அமைதி நோபலும் டிரம்ப் கூப்பாடும்!

அமைதி நோபலும் டிரம்ப் கூப்பாடும்!

2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞரும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் உயர் ஆணையருமான நவி பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவுக்காக வாதிட்டது முதல், காசாவில் இஸ்ரேல் நடத்திய

இனப்படுகொலையைத் துணிச்சலாக உலகிற்குச் சுட்டிக்காட்டியது வரை, சர்வதேச சட்டத்தின் மாண்பைப் பாதுகாத்ததற்காக நவி பிள்ளைக்கு இந்த விருதுவழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விருதைப் பெறத் துடித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தான் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும், தனக்கே எட்டு நோபல் பரிசுகள்வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் புலம்புவது நகைப்பிற்குரியது மட்டுமல்ல, அவரதுஎதேச்சதிகாரப் போக்கின் உச்சமுமாகும்.

நோபல் பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் சமூக வலைத்தளங்களில் நவி பிள்ளையை “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிரி” என்றும், நார்வே நாட்டிற்கு இது “துடைக்க முடியாத கறை” என்றும்டிரம்ப் குறிப்பிட்டு கூப்பாடு போட்டுள்ளார். அதுமட்டுமின்றி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிரான பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்க அரசு விதித்துள்ளது. காசாவில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களைக் கொன்றுகுவிக்கும்இஸ்ரேலியப் படைகளின் இனப்படுகொலையை அம்பலப்படுத்திய ஒருமனித உரிமைப் போராளிக்கு விருது வழங்கப்பட்டதை சகித்துக் கொள்ள முடியாத டிரம்ப்பின்இந்த ஆத்திரம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அகங்காரத்தையே வெளிப்படுத்துகிறது.

தான் எட்டு போர்களை நிறுத்தத் தரகராகச் செயல்பட்டதாகக் கூறும் டிரம்ப்பின் கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய கிழக்கிலும், பிற பகுதிகளிலும் போரையும் பேரழிவையும் தூண்டிவிட்டு, பன்னாட்டு ஆயுதப் பெருமுதலாளிகளுக்கு லாபம் ஈட்டித் தரும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு ஏகாதிபத்தியத்தின் தலைவருக்கு அமைதிப் பரிசு கேட்கும் தகுதி எள்ளளவும் இல்லை. பாலஸ்தீன மக்களின் மீதான வன்முறையை நியாயப்படுத்தி, சர்வதேசச் சட்டங்களைக் காலில் போட்டு மிதிக்கும் அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டணியைநவி பிள்ளை அம்பலப்படுத்தியதே டிரம்ப்பின் இந்த ஆத்திரத்திற்குக் காரணமாகும்.

அமைதி என்பது வெறும் போர் நிறுத்த உடன்படிக்கைகளில் மட்டும் இல்லை; மாறாக ஒடுக்கப்படும் ஒட்டுமொத்த மக்களின் மனிதஉரிமைகள் மற்றும் நீதியின் மீதே கட்டமைக்கப்படுகிறது என்பதை டிரம்ப் போன்ற ஏகாதிபத்தியவாதிகள் உணர மறுக்கின்றனர். மனிதஉரிமைகளையும், பன்னாட்டுச் சட்ட விதிகளையும் துச்சமாக மதிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியப் போக்கிற்கு, இந்த நோபல் பரிசு அறிவிப்பு ஒருதகுந்த பதிலடியாகும். போரையும் கார்ப்பரேட் ஆதிக்கத்தையும் வளர்க்கும் டிரம்ப் போன்றஎதேச்சதிகார ஆட்சியாளர்களின் கூச்சல்களுக்குப் பணியாமல், உலகளாவிய அமைதிக்காகவும் நீதிக்குமாகவும் குரல் கொடுக்கும் நவிபிள்ளை போன்றவர்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.