பரமக்குடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் அமைச்சரிடம் நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை
7 Oct 2026, 8:57 pm

பரமக்குடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் அமைச்சரிடம் நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

இராமநாதபுரம், அக்.7-பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜிடம் இராமநாதபுரம் தொகுதி எம்.பி. கே.நவாஸ்கனி கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த செப்.26-ல் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட நவாஸ்கனி எம்.பி., நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதன் அடிப்படையில் புதன் கிழமை தலைமைச் செயலகத்தில் அமைச் சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

மருத்துவமனைக்கு ஏற்கெனவே 400 படுக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ள நிலையில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு மேலும் 100 படுக் கைகள் ஒதுக்க வேண்டும். அனுமதிக்கப் பட்ட 21 மருத்துவர்களில் 19 பேர் மட்டுமே பணியாற்றுவதால், மயக்கவியல், அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், எலும்பியல், தோல், நரம்பியல், மகப்பேறுஉள்ளிட்ட துறைகளில் கூடுதலாக 15 சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.மேலும், மருத்துவமனையில் பணியாற்றும் 46 செவிலியர்களில் 23 பேர் தற்காலிக பணியாளர்களாக உள்ள நிலையில், கூடுதலாக 40 செவிலியர்களை நியமிக்க வேண்டும். புதிய சிடி ஸ்கேன்,எக்ஸ்ரே இயந்திரம், 3 லேப் டெக்னீசியன்கள் மற் றும் ஆக்சிஜன் வசதிக்குத் தேவையான கூடுதல் நிதி வழங்கவேண்டும்.

புதிய பிணவறை கட்டிடத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளைக் கருத்தில் கொண்டு, அதன் உயரத்தை அதிகரித்து பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அருண்ராஜிடம் நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தினார்.