முந்தய பக்கம்

புத்தக கண்காட்சியில் ‘நவரசங்கள்’ சிறப்பு கவியரங்கம்

19 Feb 2026, 3:09 pm
புத்தக கண்காட்சியில் ‘நவரசங்கள்’ சிறப்பு கவியரங்கம்
<p><strong>புத்தக கண்காட்சியில் &lsquo;நவரசங்கள்&rsquo; சிறப்பு கவியரங்கம்</strong></p> <p>திருநெல்வேலி, பிப். 19- நெல்லை மாநகராட்சி வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் ஒன்பதா வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா அரங்கில் நாள்தோறும் தமிழ் அறிஞர்க ளின் சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனையொட்டி &nbsp;கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணியின் தலைமையில் &lsquo;நவரசங்கள்&rsquo; எனும் தலைப்பில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. &nbsp;இதில் &nbsp;பேராசிரியர் ஹரிஹரன் அச்சம் எனும் தலைப்பிலும் கவிஞர் சு.த.மூர்த்தி உவகை எனும் தலைப்பிலும், வங்கி ஊழியர் &nbsp;சக்தி வேலாயுதம் பெருமிதம் எனும் தலைப்பிலும், கவிஞர் பிரபு அமைதி எனும் தலைப்பிலும் எழுத்தாளர் வள்ளி சேர்மலிங்கம் உவகை எனும் தலைப்பிலும், அரசு ஊழியர் காந்தி மதி வேலன் நகை எனும் தலைப்பிலும் கவிஞர் தச்சை மணி இளிவரல் எனும் தலைப்பிலும், நல்லாசிரியர் இராஜேந்தி ரன் வெகுளி எனும் தலைப்பிலும் கவிஞர் கமலலியோனா அழுகை எனும் தலைப்பி லும் கவிதை வாசித்தனர். நிறைவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வட்டாட்சியர் மாரிராஜா நினைவுப் பரிசாக கவிஞர்களுக்கு &nbsp;நூல்களை வழங்கிச் சிறப்பித்தார். &nbsp;இந்நிகழ்ச்சியில் முனைவர் கணபதி சுப்பிரமணியன், தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் தம்பான், தமிழ்ச் செம்மல் பாமணி, பொருநை இலக்கிய வட்டப்புரவலர் நாதன், &nbsp;தூய தமிழ்ப் பற்றாளர் ஜெயபாலன், நல்லாசிரியர் இராமசாமி, பள்ளித் தாளாளர் ரவிச்சந்தி ரன், முனைவர் ஜெயமேரி, பேராசிரியை அனுசுயா, நல் நூலகர் முத்துகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சபேசன் , ஆசிரியர் சிவ செல்வமாரிமுத்து, சமூக செயற் பாட்டாளர் திருமலை முருகன், முத்துராமன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram