தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கர் நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் அறிவிப்பு!
9 Oct 2026, 10:35 pm

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கர் நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் அறிவிப்பு!

ஸ்டாக்ஹோம், அக். 9 -2026-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு நவநீதம் நவி பிள்ளைக்கு (85) அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியினரான நவநீதம் நவி பிள்ளை, ஒரு சட்ட வல்லுநராவார். தென்னாப்பிரிக்காவில் கொடூரமாக பின்பற்றப் பட்ட இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். 1973-ஆம் ஆண்டு, நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த போது அவருக்கு சட்ட உதவி செய்தவர்.

தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய வெள்ளையினத்தை சேராத முதல் பெண் நீதிபதி என்ற சிறப்பைப் பெற்றவர். சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி - ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவர் -ஐ.நா. அவையின்மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர்பதவிகளையும் நவநீதம் பிள்ளை வகித்துள் ளார். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிக்கான 2021-2025 ஐ.நா விசாரணை ஆணைய தலைவராகவும் பணியாற்றி யுள்ளார்.இத்தகையை பின்புலம் கொண்ட நவநீதம் அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொண்டமுயற்சிகளுக்காக அமைதிக்கான நோபல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.