தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

30 Mar 2026, 3:40 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

உதகை, மார்ச் 30- முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிக ளில், பள்ளி மாணவர்களுக்கான இயற்கை பாதுகாப்பு  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசி னகுடி கோட்டத்திற்குட்பட்ட மசினகுடி, சிங்காரா, சீகூர்  மற்றும் நீலகிரி கிழக்கு சரிவு சரகம் ஆகிய வனச்சரகங்க ளின் சார்பில், மாணவர்களுக்கான வன உயிரின மற்றும்  இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப் பட்டு வருகின்றன. அதன்படி, மசினகுடி வனச்சரகம் சார் பில், மாயார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர் கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி தெப்பகாடு பகுதியில் நடை பெற்றது. மேலும், மசினகுடி, பொக்காபுரம் உண்டு  உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் கலந்து கொண்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சீகூர் வனச்சரகம் சார்பில் ஆனைக்கட்டி அரசு பழங்கு டியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் 45 பேர்  கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சிறியூர் ஹள்ளா  ஆற்றோரப் பகுதிகளில் இயற்கை பாதுகாப்பு குறித்து  விளக்கமளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆனைக் கட்டி ஓய்வு விடுதியில் உதகை அரசு கலை அறிவியல்  கல்லூரி உதவி விரிவுரையாளர் ராமகிருஷ்ணன், யானை கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நீலகிரி கிழக்கு சரிவு சரகத்தின் சார்பில் தெங்கு மரஹடா அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அல்லிமாயார்  நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்க ளுக்கு வன உயிரினம் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாம்கள் மூலம் மாணவர்களுக்கு வன  உயிரினங்கள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க  வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

விபத்தில் இருவர் உயிரிழப்பு கோவை, மார்ச் 30- வாளையாறு அருகே இரு கார்கள் மோதி விபத்தில்  கேரளாம் மாநிலம் புகைப்பட கலைஞர்கள் இருவர்  உயிரிழந்தனர். கோவை பாலக்காடு நெடுஞ்சாலை வாளையார் அருகே இரண்டு கார்கள் மோதிய விபத்தில் பாலக் காட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் வினீஸ் (34). அஜித் (25) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தனர். கோவையில் நடைபெற்ற திருமண  நிகழ்ச்சியில் புகைப்படங்கள் எடுத்துவிட்டு கேரளம் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இருவர் படுகாயங்களுடன் பாலக்காடு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர். கே.ஜி சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் பார் கவுன்சில் தேர்தல் சேலம், மார்ச் 30- சேலத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்த லில் வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தமிழகம்  முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்று வரு கிறது. தமிழ்நாடு பாண்டிச்சேரி சேர்ந்த சுமார் ஒரு லட்சம்  வழக்கறிஞர்கள் வாக்களிக்கின்றனர். 23 உறுப்பினர்களை தேர்வு செய்ய நடக்கும் இந்த தேர்வில் 143 பேர் போட்டியிடு கின்றனர். இதில் 19 ஆண் உறுப்பினர்களையும், நான்கு பெண்  உறுப்பினர்களையும் தேர்வு செய்ய வேண்டும். அதன் ஒரு பகுதியாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற  வளாகத்தில் நடைபெற்ற தேர்தலில் 2444 பேர் வாக்களிக்க  தகுதி பெற்றுள்ளனர். திங்களன்று காலை முதலே ஆர்வமாக  வழக்கறிஞர்கள் வாக்களித்தனர்.

விதிமுறையை மீறி பட்டாசு வெடித்த அ.திமு.க.வினரை எச்சரித்து அனுப்பிய போலீசார் திருப்பூர், மார்ச் 30 - தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி வேட்பாளரை வர வேற்று பட்டாசு வெடித்த அதிமுகவினரை காவல்துறையி னர் எச்சரித்து அனுப்பினார்கள். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனை அதிமுக அறிவித்துள்ளது.  அதன்படி வடக்கு தொகுதியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.  ஞாயிறன்று ஒரு காலை சிறுபூ லுவபட்டி, சாமுண்டிபுரம், ஆத்துப்பாளையம், அனுப்பர்பா ளையம், 15-வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பகுதி  நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 15- வேலம்பாளையம் வாரச் சந்தை பகுதியில் நடு சாலையில்  வாகனங்களை நிறுத்தி அவரை வரவேற்க அப்பகுதி கட்சி  நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.  தேர்தல் விதிமுறை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற் படுத்தும் விதத்தில் பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக போலீ சார் அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய முயற்சி  செய்தனர். அப்போது அ.தி.மு.க.வினருக்கும் போலீசா ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீ சார் வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.  இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

சிறுத்தை நடமாட்டம் என பீதி வனத்துறை ஆய்வில் மறுப்பு திருப்பூர், மார்ச் 30 - திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே தொரவலூர்  ஊராட்சியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக ஊட கங்களில் படத்தை பகிர்ந்தது குறித்து வனத்துறையினர் தீவிர  ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிகுறி தென்படவில்லை  என்று மறுப்புத் தெரிவித்துள்ளனர். தொரவலூர் ஊராட்சியில் சிறுத்தை நடமாட்டம் இருப்ப தாக சமூக ஊடகங்களில் படங்களை சிலர் பகிர்ந்துள்ளனர்.  இதையடுத்து இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்ப தாக பொது மக்களிடம் பீதி ஏற்பட்டது. எனவே வனத்துறை யினர் இங்கு வந்து கடந்த மூன்று நாட்களாக தீவிர ஆய்வு  மேற்கொண்டனர். இதில் சிறுத்தை இருப்பதற்கான அறிகுறி,  கால்தடம் எதுவும் தென்படவில்லை என வனத்துறையினர் உறுதிப்படுத்தினர். மேலும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக ஊடகங்களில் படத்தை பகிர்ந்தவர்களிடம் விசா ரணை நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.

வாக்களிப்பை வலியுறுத்தி கோலங்கள்   திருப்பூர், மார்ச் 30- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசி யத்தை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக, திங்களன்று திருப்பூர் சிக்கண்ணா  அரசு கலைக்கல்லூரி மற்றும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர். மனிஷ் நாரணவரே 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கி யத்துவம் குறித்து வரையப்பட்டிருந்த வண்ணமயமான விழிப்புணர்வு கோலங்களை அவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம் என்றும், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்றும் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

சிறப்பு ரயில்கள் திருப்பூர், மார்ச் 30– சேலம் ரயில்வே கோட்ட  மக்கள் தொடர்பு அலுவலர்  ஜி.மரிய மைக்கேல் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறப்பு ரயில்கள் கோயம் புத்தூர், திருப்பூர், ஈரோடு,  சேலம் மற்றும் ஜோலார் பேட்டை வழியாக இயக்கப் பட உள்ளன. வண்டி எண்  06081 திருவனந்தபுரம் வடக்கு - சாந்த்ராகாச்சி சிறப்பு ரயில் ஏப்ரல்  3 முதல் ஜூன் 5 வரை வாரந் தோறும் வெள்ளிக்கிழமைக ளில் மதியம் 02.15 மணிக்குத் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு, ஞாயிற் றுக்கிழமை மதியம் 01.45  மணிக்குச் சாந்த்ராகாச் சியை அடையும். இந்த ரயில்  வெள்ளிக்கிழமை இரவு 11.05  மணிக்கு கோயம்புத்தூருக் கும், 11.50 மணிக்கு திருப்பூ ருக்கும் வந்து சேரும். சனிக்கி ழமை அதிகாலை 12.45  மணிக்கு ஈரோடு, 02.03  மணிக்கு சேலம் மற்றும்  04.45 மணிக்கு ஜோலார் பேட்டை ஆகிய நிலையங் களை வந்தடையும்.மறு மார்க்கமாக, வண்டி எண் 06082 சாந்த்ராகாச்சி - திருவ னந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில் ஏப்ரல் 6 முதல் ஜூன் 8  வரை வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் மதியம் 02.15  மணிக்குச் சாந்த்ராகாச்சி யில் இருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை 09.55 மணிக்குத் திருவனந்தபுரம் வடக்கை அடையும். இந்த ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 07.45 மணிக்கு ஜோலார்பேட்டை, 09.27 மணிக்கு சேலம், 10.30 மணிக்கு ஈரோடு மற்றும் 11.23 மணிக்கு திருப்பூர் ஆகிய நிலையங்களுக்கு வரும். புதன்கிழமை நள்ளி ரவு 12.27 மணிக்கு கோயம்புத் தூர் நிலையத்தை வந்தடை யும், இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தரமற்ற குடிநீர் கேன்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 30 - திருப்பூரில் தரமற்ற குடிநீர் கேன் கள் விநியோகம் செய்வதை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போல் தரமற்ற குடிநீர் கேன்களை பறி முதல் செய்ய வேண்டும் என்று நுகர் வோர் அமைப்புகள் வலியுறுத்தி உள் ளன. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர் தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந் துள்ளதை அடுத்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க் கூட்டம் நடத்தப்ப டுவதில்லை. அதற்கு பதிலாக, ஆட்சி யரக அலுவலக நுழைவாயிலில் மக் கள் அளிக்கும் மனுக்களை பெறுவ தற்கு தனி பெட்டி வைக்கப்பட்டுள் ளது. இதில் மக்கள் மனுக்களை போட்டு வருகின்றனர். இந்நிலையில் நல்லூர் நுகர் வோர் மன்றத் தலைவர் சண்முகசுந்த ரம், நுகர்வோர் நல முன்னேற்ற சங் கத் தலைவர் ஈ.பி.சரவணன் ஆகி யோர் அளித்துள்ள மனுவில் கூறப் பட்டு இருப்பதாவது: திருப்பூரில் தண் ணீர் கேன்கள் விற்பனை அதிகளவில்  நடைபெற்று வருகிறது. இதில் தர மற்ற குடிநீர் கேன்கள் விற்பனை அதி கரித்துள்ளது. குடிநீர் தேவை அதிக மானதை பயன்படுத்தி, பல நிறுவ னங்கள் முளைத்துள்ளன.  கேன்களில் விற்கப்படும் குடிநீ ரின் தரம், பாதுகாப்புப் பற்றி ஆய்வு  நடைபெறுவதில்லை. குடிநீர் பாட் டில்கள் மற்றும் கேன்களில் தரச் சான்று மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை அச்சிடப்பட் டிருக்க வேண்டும். ஆனால் திருப்பூர்  மாவட்டப் பகுதியில் சில குடிநீர் கம் பெனிகள் முன்தேதியிட்டு கேன் களில் குடிநீரை அடைத்து விற்பனை  செய்வதாக பொதுமக்கள் தெரி விக்கின்றனர். மேலும் பஸ் நிலையம், கடைவீதி  போன்ற இடங்களில், சிறிய கடைக ளில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் தரமற்றதாகவும், பாக்கெட்டுகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். சில நிறுவனங்களின் கேன் தண் ணீர் தொடர்பாக பல புகார்கள் எழுந் துள்ளன. தண்ணீரில் நெல்லிக்காய் பொடியை கலந்து வடிகட்டிய பிறகு,  தண்ணீர் சற்றே சுவை மாறிவிடும். இதை ‘மினரல் வாட்டர்’ என, கேன்க ளில் அடைத்து விற்கின்றனர். இன் னும் சில இடங்களில் ரசாயனப் பொடி  கலந்தும், தண்ணீரின் சுவை மாற்றப் படுவதாக புகார் எழுகிறது. பாதுகாப்பான, சுகாதாரமான, தர மான குடிநீரை தேர்ந்தெடுப்பது மக்க ளின் உரிமை. மக்களுக்கு சுகாதார மான குடிநீரை தரவேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் கடமை. அதே நேரம், குடிநீரை விற்கும் நிறுவனங்க ளும் பொறுப்பை உணர்ந்து, பாது காப்பான குடிநீரை விற்க வேண்டும்.  எனவே தரமில்லாத குடிநீர் விற்ப னையை உணவுப் பாதுகாப்பு அதி காரிகள் கண்காணித்து, கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென நுகர் வோர் சங்கங்கள் வலியுறுத்தி உள் ளன.

ரூ.1.34 கோடி பறிமுதல் ஈரோடு, மார்ச் 30- ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி நடை பெற்ற சோதனையில், இதுவரை 1 கோடியே 34 லட்சத்து 18  ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம்  கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் தொகை, பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் ஞாயிறன்று வரை  ரூ.24 லட்சத்து 64 ஆயிரத்து 780 பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.22 லட்சத்து 54 ஆயிரத்து 780 திருப்பிக் கொடுக்கப் பட்டது. அதேபோல், ஈரோடு மேற்குத் தொகுதியில் ரூ.13 லட் சத்து 65 ஆயிரத்து 820, பெருந்துறையில் ரூ.17 லட்சத்து 46 ஆயி ரத்து 300, பவானிசாகர் தொகுதியில் ரூ.31 லட்சத்து 61 ஆயி ரத்து 830, மொடக்குறிச்சியில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 730 பறிமுதல் செய்யப்பட்டன. பவானி தொகுதியில் ரூ.6 லட்சத்து  65 ஆயிரத்து 830, அந்தியூரில் ரூ.12 லட்சத்து 70 ஆயிரத்து 60, கோபிசெட்டிபாளையத்தில் ரூ.21 லட்சத்து 72ஆயிரத்து 660  பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தொகையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.7 லட்சத்து 78 ஆயிரத்து 100 மட்டும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட் டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.