முந்தய பக்கம்

இயற்கைக் கொடை! - முனைவர் கடவூர் மணிமாறன்

28 Feb 2026, 2:29 pm
இயற்கைக் கொடை!    -   முனைவர் கடவூர் மணிமாறன்
<p><strong>இயற்கைக் கொடை!</strong></p> <p>நீல &nbsp;வானின் எழிலைப்பார்! &nbsp; &nbsp; நீண்டு பரந்த கடலைப்பார்! கோல விண்மீன் கூட்டம்பார்! &nbsp; குலுங்கும் இயற்கை விருந்தைப்பார்! &nbsp;விண்ணில் பறக்கும் புள்ளினம்பார்! &nbsp; &nbsp; &nbsp;வெள்ளி நிலவின் ஊர்வலம்பார்! மண்ணில் ஒளிதரும் கதிரோன்பார்! &nbsp; &nbsp; &nbsp; &nbsp;மாறா இயற்கை வளத்தைப்பார்! &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; குளங்கள் ஆறுகள் சோலைகள்பார்! &nbsp; &nbsp; குன்றுகள் நிமிர்ந்தே நிற்கும்பார்! வளங்கள் நல்கும் ஏரிகள்பார்! &nbsp; வயல்கள் தோப்புகள்வனப்பைப்பார்! &nbsp;பற்பல வண்ண மலர்கள்பார்! &nbsp; &nbsp; &nbsp; பகட்டாய் வீழும் அருவிகள்பார்! அற்புத வான வில்லைப்பார்! &nbsp; &nbsp; &nbsp; &nbsp; அடர்ந்த கானக விலங்கினம்பார்! &nbsp; &nbsp; கரிய முகில்கள் நகரும்பார்! &nbsp; &nbsp; &nbsp;கனிவாய்த் தென்றல் வீசும்பார்! பெருமழைக் கொடையாம் வெள்ளம்பார்! &nbsp; &nbsp; &nbsp;பெருமை ஓங்கும் உலகைப்பார்! &nbsp;செடிகள் கொடிகள் சிரிக்கும்பார்! &nbsp; &nbsp; &nbsp; சிந்தனை சிலிர்க்கும் வியப்பைப்பார்! நடிக்கத் தெரியா இயற்கையதன் &nbsp; &nbsp; &nbsp; நானிலம் போற்றும் சிறப்பைப்பார்!</p>
Share
FacebookXWhatsAppTelegram