தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களைக் கொல்லும் ஆயுதங்கள் வாங்க நேட்டோ மாநாட்டில் பல கோடிகளுக்கு புதிய ராணுவ ஒப்பந்தங்கள்

8 Jul 2026, 8:19 pm
மக்களைக் கொல்லும் ஆயுதங்கள் வாங்க  நேட்டோ மாநாட்டில் பல கோடிகளுக்கு புதிய ராணுவ ஒப்பந்தங்கள்

மக்களைக் கொல்லும் ஆயுதங்கள் வாங்க நேட்டோ மாநாட்டில் பல கோடிகளுக்கு புதிய ராணுவ ஒப்பந்தங்கள்

அங்காரா,ஜூலை 8- துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ உச்சி மாநாடு நடந்து வருகிறது. அதில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்த மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி டிரம்ப்பை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் மூலமாக கூடுதல் பேட்ரியாட் வான் பாது காப்பு அமைப்புகளை வாங்குவதற்கு அவர் முயற்சிப்பார் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேட்டோ நாடுகள் தங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதத்தை ஆயுதங்கள் வாங்கவும் ராணுவத்திற்கும் செலவு செய்ய வேண்டும் என உத்தரவு போட்டார். உறுப்பு நாடுகளும் தங்கள் ராணுவத்துக்கு செலவு செய்யும் இலக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக உயர்த்த ஒப்புக் கொண்டன.

இதில் 2035-ஆம் ஆண்டிற்குள் 3.5 சதவீதம் ராணுவச் செலவுகளுக்கும், 1.5 சதவீதம் பாதுகாப்பு தொடர்பான தேவைக ளுக்கும் ஒதுக்கப்படும் என சொல்லப்பட்டது. அதற்கு உடனடியாக ஒத்துழைக்காத நாடுகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் அந்த அழுத்தத்தை போக்கவும், நேட்டோ நாடுகள் ராணுவத்திற்கு முதலீடு செய்கின்றன என காட்டவும் இந்த மாநாட்டில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பி லான புதிய ராணுவத் திட்டங்களை நேட்டோ அறிமுகப்படுத்தி உள்ளது. பல உறுப்பு நாடுகளின் தலைவர்கள் புதிய ராணுவ ஒப்பந்தங்களை அறிவிக்க உள்ளனர்.

எங்கள் தற்காப்பிற்குத் தேவையான முக்கிய மான ராணுவத் தளவாடங்களை வழங்கும் வகையில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களை நாங்கள் அறிவிக்க உள்ளோம் என்று உச்சிமாநாட்டிற்கு முன்ன தாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்திருந்தார்.

நேட்டோ நாடுகள் மற்றும் கனடா ராணு வத்திற்காக 2017 முதல் சுமார் 1.2 டிரில்லி யன் டாலர் செலவிட்டுள்ளதை “தி டிரம்ப் டிரில்லி யன்” (The Trump Trillion) என்ற விளக்கப்படம் மூலம் மார்க் ரூட்டே சுட்டிக்காட்டிய போதிலும், இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது நடத்திய போரில் நேட்டோ நாடுகள் பங்கேற்காத கார ணத்தால் டிரம்ப் அந்நாடுகளின் மீது அதிருப்தி யில் உள்ளார்.

“எனக்கு அவர்களின் பணம் தேவையில்லை, எனக்குத் தேவை விசுவாசம் மட்டுமே” என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படையாகவே டிரம்ப் தெரிவித்தார். அதேபோல சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கவனம் செலுத்தி வருகிறது.

இதனால் ஐரோப்பா தனது பாதுகாப்பைத் தானே கவனித்துக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அதாவது நேட்டோ ராணுவ கூட்டணிக்கான செலவுக ளுக்கு அமெரிக்காவை எதிர்பார்க்கக் கூடாது என ஏற்கெனவே கூறியுள்ளது. இதற்காக ‘நேட்டோ 3.0’ என்ற புதிய ஆலோசனையை அமெரிக்கா முன்வைத்தது. இதில் ஐரோப்பிய நாடுகள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே முக்கிய விதியாகும்.

நேட்டோ 3.0 இன் உண்மையான முகம் என்னவென்றால், அது ரஷ்யாவையும் சீனா வையும் பகிரங்க எதிரிகளாகப் பிரகடனப் படுத்தியிருப்பது மட்டுமல்ல, உலகளாவிய லட்சியங்களைக் கொண்டிருப்பதே ஆகும்.

அமெரிக்கா தனது சக்தியை ஐரோப்பா வழி யாக உலகளவில் நிலைநாட்ட நேட்டோ உதவு கிறது என்பதை வெளிப்படையாக நேட்டோ பொதுச் செயலாளர் ஒப்புக்கொண்டுள்ளார். கம்யூனிச எதிர்ப்பு, உலகத்தை பாது காக்கின்றோம், மக்களை பாதுகாக்க போர் தொடுக்கிறோம், உலகளவில் பயங்கர வாதத்தை எதிர்க்கின்றோம் என நேட்டோ தன்னுடைய அமைப்புக்கு பல காரணங்களை கூறியுள்ளது.

வார்த்தைகள் மாறினாலும் அதன் அடிப்படை நோக்கம் மாறவில்லை. இடதுசாரிகள் ஆளும் நாடுகளை கவிழ்ப்பது, ஏழை மற்றும் வளரும் நாடுகள் மீது போர் தொடுப்பது, அதன் வளங்களை கொள்ளை யடிப்பது, பிறகு பயங்கரவாத அமைப்புகளை ரகசியமாக வளர்த்து விடுவது உள்ளிட்ட செயல்களை நேட்டோ செய்து வருகிறது. நேட்டோ அமைப்பையும் அதன் போர் நட வடிக்கைகளையும் எதிர்ப்பவர்கள் மீது தொடர்ந்து அடக்கு முறைகள் ஏவப்படு கின்றன.

அதே நேரத்தில் மறுபுறம் நேட்டோ தலைவர்களே அதன் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகள் நேட்டோவை புனிதப்படுத்தி உருவாக்கப்பட்ட கதைகளை டிரம்ப் உடைக்கும் வகையில் பேசியுள்ளார்.

இந்த மாநாட்டில் ஐரோப்பிய நாடுகள் ராணுவத்துக்கு பணம் ஒதுக்குவதில் கூடுதல் பொறுப்பேற்பார்கள் என்று கூறப்பட்டாலும், அமெரிக்காவிற்குப் பதிலாக ஐரோப்பாவால் நேட்டோவின் ராணுவ முதுகெலும்பாகச் செயல்பட முடியாது.

ஆனால், பால்டிக் நாடுகள், போலந்து, சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகள் புதிய ராணுவக் கட்ட மைப்புகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக, பின்லாந்தில் அமெரிக்க அணு ஆயுதங்களை நிலைநிறுத்த அனுமதிப்பது, நேட்டோ அமைப்பின் விரிவாக்கத்தின் உச்சமா கப் பார்க்கப்படுகிறது.

நேட்டோ அமைப்பு தன்னை ஒரு “ ராணுவ தொழில்துறை புரட்சி” என்று அழைத்துக் கொள்கிறது. உண்மையில் இது ஒரு நாட்டு மக்களின் வரிப்பணத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் ஆயுதங்களை உற்பத்தி செய்து ஆயுத நிறுவனங்களுக்கு லாபத்தை அள்ளித்தருகிறது. அதன் மற்றொரு விளைவாக இன்னொரு நாட்டு மக்களை படுகொலை செய்யும் கொடூரங்களும் அரங்கே றுகின்றன.

கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலத் திட்டங்கள், காலநிலை மாற்றத்தை கட்டுப் படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத ஐரோப்பிய நாடுகள், இன்று ராணுவத்துக்கு தடையின்றிப் பணம் செலவிடுகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.