முந்தய பக்கம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்

20 May 2026, 9:09 pm
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்

ஆன்லைன் மருந்து விற்ப னைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருந்துக் கடைகள் அடைத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பீகார், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, தலைநகர் தில்லி என அனைத்து மாநிலங்களிலும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஆன்லைன் மருந்து விற்பனையான இ-பார்மசி துறையில் உள்ள முறைகேடு கள், போலி மருந்துகள் விற்பனை, முறையான கட்டுப்பாடுகள் இல்லாதது உள்ளிட்ட குறைகளை கண்டித்து அகில இந்திய மருந்து வியாபாரிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் மருந்துக் கடைகள் அடைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கருக்கலைப்பு மாத்திரைகள், வலி நிவாரணிகள் உள்ளிட்ட சில முக்கிய மருந்துகள் முறையான மருத்து வர்களின் பரிந்துரைகள் இல்லாமலோ, முறையான தரவுகளை பெறாமலோ விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த கட்டுப்பாடுகள் எதுவும் இணைய வர்த்தகர்களுக்கு இல்லை. இது மிகப்பெரிய பிரச்ச னையை உருவாக்கி வருகிறது என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். ஆன் லைன் மருந்தகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும், போலி மருந்துகளுக்கு எதிரா கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram