ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்பு சட்டத் திருத்தத்தை திரும்ப பெறுக! நாடு தழுவிய அளவில் ஓய்வூதியர்கள் போராட்டம்
29 Sept 2026, 9:29 pm

ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்பு சட்டத் திருத்தத்தை திரும்ப பெறுக! நாடு தழுவிய அளவில் ஓய்வூதியர்கள் போராட்டம்

சென்னை, செப். 29 -உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமான ஒன்றிய அரசின் ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி செவ்வாயன்று (செப்.29) நாடு முழுவதும ஓய்வுதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும் வகையில் அதன் பணிவரையறையை மாற்றி அமைக்க வேண்டும். ஊதியக்குழு பரிந்துரை க்கு முன்பாக 20 சதவீதம் இடைக்காலநிவாரணம் வழங்க வேண்டும், அகவிலைப் படியில் 50 சதவீதத்தை அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் சேர்க்கவேண்டும். கம்யூட்டேசன் செய்யப்பட்ட ஓய்வூதியத்தை 10 ஆண்டு 8 மாதத்தில் திரும்ப வழங்க வேண்டும், குடும்பஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், பழைய ஓய்வூதியதிட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ரயில் கட்டணங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட 50 சதவீதகட்டணச் சலுகையை மீண்டும் செயல்படுத்த வேண்டும், கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும், 65-75 வயது வரை 5 ஆண்டுக்கொருமுறை 10சதவீதமும், அதன்பின்னர் 5 ஆண்டுக்கொருமுறை 20 சதவீதமும் ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும், மூத்தகுடிமக்களுக்கான தேசிய ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனத்தின் அறை கூவல்படி நாடு முழுவதும் இந்த தர்ணாபோராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மாவட்டந்தோறும் நடைபெற்ற போராட்டத்தின் ஒருபகுதியாக சென்னை நந்தனம் ஓய்வூதியம் வழங்கும்அலுவலகம் முன்பும் தர்ணா நடைபெற்றது.மாவட்டத் தலைவர பி.எஸ்.அப்பர் தலைமையிலான இந்த போராட்டத்தை மாநில பொதுச்செயலாளர் கி.இளமாறன் தொடங்கி வைத்தார். மாநிலச் செயலாளர் எம்.நாதன், சிஐடியு தென்சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தே.வாசுகி, ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் என்.ராம சாமி, பொருளாளர் ஜெ.பட்டாபி, துணைத்தலைவர் எம்.காதர் உள்ளிட் டோர் பேசினர். அகிலஇந்திய தணிக்கை கணக்கு ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.மோகன் நிறைவுரையாற்றினார்.