தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாடு முழுவதும் ஜந்தர் மந்தர் “இரவே விழித்தெழு, நாடே விழித்தெழு!” மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று

23 Jul 2026, 9:31 pm
நாடு முழுவதும் ஜந்தர் மந்தர் “இரவே விழித்தெழு, நாடே விழித்தெழு!” மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று

நாடு முழுவதும் ஜந்தர் மந்தர் “இரவே விழித்தெழு, நாடே விழித்தெழு!” மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் இரவுக் காவல் போராட்டம்

புதுதில்லி, ஜூலை 23 - மாணவர்களின் தொடர் போராட்டங் களுக்கு ஆதரவாகவும், ஒன்றிய அரசின் அடக்குமுறையைக் கண்டித்தும், “இரவே விழித்தெழு, நாடே விழித்தெழு!” என்ற முழக்கத்துடன் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய ஐந்து வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் நடத்திவரும் அறப்போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில், இந்திய மாணவர் சங்கத்தின் அழைப்பை ஏற்று ஜூலை 24 அன்று இரவு நாடு முழுவதும் இந்த இரவுக் காவல் போராட்டத்தை முன்னெடுக்க இந்த அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன. இதன் மூலம் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ‘ஜந்தர் மந்தர்’ போன்ற போராட்டக் களங்களை உருவாக்கத் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திர ளாகத் திரண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

முக்கியக் கோரிக்கைகள்:

• மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.

• தேசிய தேர்வு முகமை (NTA) கலைக்கப்பட வேண்டும்.

• தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) திரும்பப் பெறப்பட வேண்டும்.

• நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

• சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடன டியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இரவுக் காவல் போராட்டத்தின் விவரங்கள் ஜூலை 24 அன்று இரவு 10.00 மணிக்குத் தொடங்கும் இந்த இரவுக் காவல் போராட்டம் விடிய விடிய தீப்பந்த ஊர்வலங்கள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் நடைபெறும். இதில் கலைஞர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனச் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர். மேலும், காவல் துறையின் அத்துமீறல்களை விளக்கும் புகைப்படங்கள் இடம்பெறும் பதாகைகள் வைக்கப்படுவதுடன், பொதுமக்களிடம் இருந்து கையெழுத்துகளும் பெறப்படவுள்ளன.

காவல்துறை அடக்குமுறைக்குக் கண்டனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடிப் பார்வையின் கீழ் செயல்படும் தில்லி காவல் துறை மற்றும் அதிரடிப்படை ஆகியவை, அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது நடத்திய கொடூரமானத் தாக்குதல்களையும், மனித உரிமை மீறல்களை யும் இந்த அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. குறிப்பாக, பெண் போராட்டக்காரர்கள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதும், பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்களும் அதிர்ச்சியைத் தருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய அனைத்துக் காவல்துறை அதிகாரிகளையும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், உயர்மட்ட நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

கல்வி அமைப்பின் சீரழிவு

மோடி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கார்ப்பரேட் மற்றும் வகுப்புவாதக் கல்வி முறையே இந்தச் சீரழிவுகளுக்குக் காரணம் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் அளித்த பதிலின்படி, தேசிய தேர்வு முகமையில் நிரந்தர ஊழியர்கள் யாரும் இல்லை என்பதும், அதே நேரத்தில் மாணவர்களின் பதிவுக் கட்ட ணம் மூலம் கிடைக்கும் வருவாய் 2018-19 இல் ரூ. 504 கோடியாக இருந்தது அதிகரித்து 2023-24 இல் ரூ. 1,116 கோடியாக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2017-ஆம் ஆண்டு தேசிய தேர்வு முகமை தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 100 தேர்வு களில் வினாத்தாள்கள் கசிந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 50 முறை மறுதேர்வுகள் நடத்தப் பட்டுள்ளதாகவும், இதனால் நூற்றுக் கணக்கான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயரச் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கல்வித்துறையைக் காப்பாற்று வது என்பது இந்தியாவின் எதிர்கால சந்ததியைக் காப்பாற்றுவதற்குச் சமம் என்று குறிப்பிட்டுள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள், மோடி அரசை இந்த கோரிக்கைகளை ஏற்கச் செய்யும் வகையில் இந்த இயக்கத்தில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்யுமாறு அறைகூவல் விடுத்துள்ளன. இந்த அறிக்கையை மேற்கண்ட அமைப்புகளின் பொதுச் செயலாளர்கள் எளமரம் கரீம், விஜூ கிருஷ்ணன், பி. வெங்கட், கனினிகா கோஷ் மற்றும் ஹிமாக்னராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.