தீக்கதிர் முக்கிய செய்திகள்
20 Mar 2026, 2:55 pm

தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்.பி., சுப்ரியா சுலே

நாடாளுமன்றத்தில் இருதரப்பிலும் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். ஆளுங்கட்சியின் (பாஜக) தொடர்ச்சியான இடையூறுகள், அமைச்சர்களின் குறுக்கீடுகள் நாடாளுமன்றச் செயல்பாட்டைப் பலவீனப்படுத்துகின்றன. கொள்கைகள் மீதான விவாதம் அவசியம். ஆனால் அது கண்ணியமானதாகவும் தனிப்பட்ட தாக்குதல்கள் அற்றதாகவும் இருக்க வேண்டும்.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் ஆணையர் ஆகியோரை மாற்றுவதால் என்ன சாதிக்க முடியும்? மகாராஷ்டிரா, அசாம் போன்ற பிற மாநிலங்களில் ஏன் இது போன்ற மாற்றங்கள் நடப்பதில்லை?

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஓவைசி

ஒவ்வொரு நாட்டிடமும் ‘எண்ணெய் மூலோபாய இருப்பு’ என்று ஒன்று உள்ளது. நம் நாட்டில் உள்ள இருப்பு தொடர்பாக பாஜகவினர் பேச மறுக்கின்றனர். ஆனால் முஸ்லிம்களுடன் தொடர்புடைய எதையும் வாங்க வேண்டாம் என்று மட்டும் சொல்கிறார்கள். அப்படியென்றால் கத்தாரிலிருந்து எரிவாயுவையோ, சவூதி அரேபியாவிலிருந்து பெட்ரோலியத்தையோ இறக்குமதி செய்யமாட்டோம் என ஏன் சொல்ல மறுக்கிறார்கள்?

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் கவலையளிப்பதாக உள்ளது. விரைவில் போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்பும் என்று நம்புகிறேன். இந்தப் போர் நமது தேசத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையுமே பாதிக்கும்.