முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

19 Feb 2026, 3:09 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்.பி., சுப்ரியா சுலே

அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். பதிலளிக்கத் தாமதப்படுத்தினால், மக்களிடையே உள்ள அமைதியின்மை மேலும் அதிகரிக்கும். இது தீவிரமடைவதைத் தடுக்க, இந்தச் சம்பவத்தின் உண்மைத்தன்மை முற்றிலும் வெளிப்படையான முறையில் பொதுமக்களின் முன் கொண்டு வரப்பட வேண்டும்.

மூத்த பத்திரிகையாளர் ரன் விஜய் சிங்

மக்களவை முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா அருகில் அமர்ந்திருக்கும்போது, ராஜ் சிங் ஆமேரா என்ற பாஜக உறுப்பினர் ராகுல் காந்தியை “வீட்டிற்குள் புகுந்து சுட்டுக் கொல்வேன்” என்று மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அவர் சாப்பிட்டுக் கொண்டு தான் இருந்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட்

நாட்டில் இதற்கு முன்பும் காங்கிரஸ்  அல்லாத அரசுகள் நாட்டை ஆண்டுள்ளன. ஆனால் இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் போன்று எதையும் கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தம் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயச் சமூகத்தை இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது. இதற்கு முந்தைய எந்த அரசாங்கமும் இப்படிச் செய்ததில்லை.

காவி பயங்கரவாத எதிர்ப்பு ஊடகம்

பாஜகவின் கொள்கை அடிப்படையில் கேரளா ஸ்டோரி உண்மையானது ; பெங்கால் பைல்ஸ் உண்மையானது; காஷ்மீர் பைல்ஸ் உண்மையானது; ஆனால் உலகையே உலுக்கும் பாலியல் குற்றங்க ளின் ‘எப்ஸ்டீன் பைல்ஸ்’ மட்டும் ஒரு பொய்யானதாம். என்ன நியாயம் இது??

Share
FacebookXWhatsAppTelegram