முல்லைப் பெரியாறு அணையில் தேசிய மேற்பார்வை குழு ஆய்வு
10 Nov 2025, 2:46 pm
<p><strong>முல்லைப் பெரியாறு அணையில் தேசிய மேற்பார்வை குழு ஆய்வு</strong></p>
<p>தேனி, நவ.10 - முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான மேற் பார்வை குழுவினர் திங்களன்று ஆய்வு செய்தனர். முல்லைப் பெரியாறு அணை கடந்த 2024 அக்.1 முதல், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் தீபங்கர்தத்தா ஆகியோர் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, மத்திய நீர்வளத் துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணை யத் தலைவர் அனில்ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய மேற்பார்வை குழுவை நியமித்தது. இந்த குழுவில் ஒன்றிய அரசு சார்பாக, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய பேரிடர் மற்றும் மீள்தன்மை உறுப்பினர் ராகேஷ் டோடேஜா, இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆனந்த ராம சாமி, தமிழகம் சார்பாக தமிழ் நாடு நீர்வளத்துறை செயலா ளர் ஜே. ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழும, தொழில் நுட்ப நிபுணர் சுப்ர மணியன், கேரள அரசு சார்பாக கேரள அரசின் கூடுதல் தலைமை செயலர் பிஸ்வநாத் சின்ஹா, கேரள நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் பிரி யேஷ் ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் கடந்த மார்ச் 22-இல் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் பெரியாறு அணையின் நீர்மட்டம் திங்களன்று காலை 134.80 அடியாக இருந்த நிலையில் மேற்பார்வை குழு வினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். முன்னதாக குழு தலைவர் அனில் ஜெயின் மற்றும் தமிழக அதிகாரிகள் தேக்கடி படகு துறையில் இருந்து, தமிழக பொதுப் பணித்துறையினர் படகில் அணைக்கு கிளம்பிச் சென்றனர். அங்கு அவர்கள் அணை நீர்வரத்து, மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் வி1 மதகின் (4 வது மதகு) இயக்கம் சரிசெய்து பார்க்கப்பட்டது. அணையின் நீர் கசிவை (சீப்பேஜ் வாட்டர்) ஆய்வு செய்தனர். அது நிமிடத்திற்கு 93.608 லிட்டராக இருந்தது. இது இன்றைய நீர்மட்ட அளவான 134.80-க்கு மிகத் துல்லியமாக இருப்பதாக வும், அதனால் அணை பலமுடன் இருப்ப தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
