தேசிய அளவிலான குறும்பட திருவிழா
7 hours before

தேசிய அளவிலான குறும்பட திருவிழா

நாமக்கல், செப்.3-திருச்செங்கோட்டில் தேசிய அளவிலான குறும்பட திருவிழா புதனன்று நடைபெற்றது. இதில், இயக்குநர் சேரன்பங்கேற்றார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அமைந்துள்ள கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) காட்சி தொடர்பில் துறை சார்பில் கே.எஸ்.ஆர்.டாக்கீஸ் இரண்டாம் ஆண்டு தேசிய அளவிலான குறும்பட திருவிழா நடைபெற்றது. கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.சீனிவாசன் தலைமையிலும், துணைத் தாளாளர் கே.எஸ். சச்சின் வாழ்த்துக்களுடன்விழா முன்னெடுக்கப்பட்டது. இந்த விழாவில் பிரபல திரைப்பட இயக்குநர் சேரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இவ்விழாவில் பங்குபெற்ற 13 குறும்படங்களை பார்த்து ரசித்தார். அதில் சிறந்த படத்தினை தேர்வு தேர்வு செய்தார். மேலும் கல்லூரி மாணவர்களுடன் சினிமா பற்றிய சந்தேகங்களையும் விளக்கங்களையும் அளித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் பெறப்பட்டு அவற்றில் இருந்து 13திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. அவற்றில் சிறந்த மூன்று திரைப்படங்களுக்கு சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.