தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

22 Mar 2026, 3:06 pm
விளையாட்டு

தேசிய சீனியர் கபடி பெடரேசன் கோப்பை தமிழ்நாடு மகளிர் அணிக்கு வெண்கலம்

ஹாட்ரிக்  சாதனை  4ஆவது பெடரேசன் கோப்பை - வெண்கலப் பதக்கம்  72ஆவது சீனியர் சாம்பியன்ஷிப் - வெண்கலப் பதக்கம்  5ஆவது பெடரேசன் கோப்பை - வெண்கலப் பதக்கம்

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் நடைபெற்ற 5ஆவது தேசிய சீனியர் பெடரேசன் கபடி போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் பலமான ரயில்வே அணியிடம் தமிழ்நாடு அணி போராடி வீழ்ந்தது. எனினும் அரையிறுதி வரை முன்னேறிய தமிழ்நாடு மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சீனியர் பிரிவில் தொடர்ச்சியாக  ஹாட்ரிக் பதக்கம் வென்று தமிழ்நாடு மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு அணியின் தோல்வி காரணம்  தமிழ்நாடு ரெய்டு மூலம் புள்ளிகள் குவிப்பதில் அசத்த லாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பாட்டத்தில் தமிழ்நாடு வீராங்கனைகள் தொடர்ச்சியாக சொதப்பி வருகின்றனர்.

தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் 2ஆவது இடத்தில் தமிழ்நாடு

24ஆவது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மார்ச் 17ஆம் தேதி முதல் 21 வரை நடைபெற்றது. இந்த தொடரில் 39 தங்கம், 31 வெள்ளி, 25 வெண்கலம் என 95 பதக்கங்களுடன் ஹரியானா மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 14 தங்கம், 20 வெள்ளி, 17 வெண்கலம் என 51 பதக்கங்களுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், 14 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் குஜராத் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

விம்பிள்டனில் புதிய ‘வீடியோ ரிவியூ’ அம்சம்

டென்னிஸ் உலகில் அதிக பரிசுத்தொகை மற்றும் பாரம்பரியமிக்க தொடரான விம்பிள்டன் தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் (2026) ஜூன் 29ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் நடுவர்களின் சில குறிப்பிட்ட தீர்ப்புகளை எதிர்த்து வீரர்கள் முறையீடு செய்யும் வகையில் ‘வீடியோ ரிவியூ’ (Video Review) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என விம்பிள்டன் போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.  பந்து தரையில் இரண்டு முறை விழுந்ததா, பந்து வீரரின் உடல் அல்லது ராக்கெட்டில் (டென்னிஸ் மட்டை)  பட்டதா போன்ற நடுவரின் முடிவெடுக்கும் திறன் சார்ந்த தீர்ப்புகளை வீரர்கள் இந்தத் தொழில்நுட்பம் மூலம் சவாலுக்கு உட்படுத்தலாம். இந்த வீடியோ ரிவியூ கோரிக்கைகளுக்கு எண்ணிக்கை கட்டுப்பாடு ஏதும் கிடையாது. வீரர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ‘எலக்ட்ரானிக் லைன் காலிங்’ எனப்படும் பந்து கோட்டிற்கு வெளியே விழுந்ததா என்பதைத் தீர்மானிக்கும் தானியங்கி முறையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என விம்பிள்டன் நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.