கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
1 Feb 2026, 3:51 pm

சித்தேரி மலைக்கிராம சாலைகளை தார்ச்சாலையாக மாற்ற வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.1- சித்தேரி மலைக்கிராமங்களிலுள்ள சாலையை, தார்ச்சாலையை மாற்றியமைக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சித்தேரி ஊராட்சி யில் மூலேரிக்காடு, பேரேரி, சூரியகடை, கல்நாடு, ஊமத்தி, அழகூர், எருமக்கடை, பாறைவளவு உட்பட 62 மலைக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் 12 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல கிரா மங்களில் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இல்லாத நிலையே உள்ளது. மலைக் கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற, பல கி.மீ., தூரம் நடந்து, சித்தேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர வேண் டும். போதிய சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிகள், உடல் நலம் பாதித்தவர்களை விரைவாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளது. மேலும், விஷக்கடி, உடல்நலம் பாதிக்கப்பட்டோரை கட்டிலில் வைத்து கால்நடையாக, மலைவாழ் மக்கள் சித்தேரிக்கு கொண்டு வருகின்றனர். எனவே, சித்தேரி மலை ஊராட்சியிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் தார்ச்சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என மலை வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவறான சிகிச்சையால் மாடு பலி

தருமபுரி, பிப்.1- பென்னாகரம் அருகே தவறான சிகிச்சையால் பசு மாடு உயிரிழந்ததாக அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மண் ணேரி, ஓ.ஜி.அள்ளி பகுதியை சேர்ந்த முத்தம்மாள் (60) என்பவர், ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது பசுமாடு ஒன்று கடந்த ஜன.29 ஆம் தேதி சரியாக உணவு உட்கொள்ளாததால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மாக்கனூர் பகுதியை சேர்ந்த கா.தமிழ்ச்செல் வன் என்பவரை அழைத்து விவரம் தெரிவித்துள்ளார். அப்போது மாடு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர் மாட்டுக்கு ஊசி செலுத்தினார். இதன்பின் வீட்டுக்கு வந்த சில நிமிடங்களில் மாட்டுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிவிக்க தமிழ்ச்செல் வனை கைப்பேசியில் அழைத்த போது, அவர் வந்து சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்பேரில், கால்நடை மருத்துவர் வந்து பரிசோதித்தபோது, பசுமாடு உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து முத்தம்மாள் அளித்த புகாரின் பேரில், பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவரிடம் ரூ.57.64 லட்சம் மோசடி: 7 பேர் கைது

சேலம், பிப்.1- சேலத்தில் மருத்துவரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் முத லீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ.57.64 லட்சம் மோசடி செய்த வழக்கில் 7 பேரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். மருத்துவரான இவரிடம், மேகனா என்ற பெண் ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை மூலம் அறிமுக மானார். இந்நிலையில், மேகனா கார்த்திகேயனிடம் ஆன் லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக் கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அவர், மேகனா அளித்த சிஎம்எஸ் குளோபல் சிஎஸ் என்ற டெலிகி ராம் ஐடி-யின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணை களாக மொத்தம் ரூ.57.64 லட்சத்தை அனுப்பினார். ஆனால், அவருக்கு முதலீடும், செலுத்திய பணம் எதுவும் திரும்பக் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, கார்த்திகேயன் சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், கடந்த ஜன.20 ஆம் தேதி யன்று நாமக்கல் மாவட்டம், இளையாம்பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (41) என்பவரை கைது செய்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர் ஈரோடு மாவட்டம், கொடுமுடி பழனிசாமி (47), மதுரை பெத்தானியாபுரம் பாலமுருகன் (52), வில்லாபுரம் கார்த்தி (26), சிவகங்கை இளையான்குடி அமர் (33), அரியலூர் பொன்பரப்பி அருண்குமார் (29), செந்துறை சஞ்சய் (24) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் திடீர் ஆய்வு மீன் கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

தருமபுரி, பிப்.1- ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் மீன் வறு வலுக்கு செயற்கை நிறமூட்டி பயன்படுத்திய நான்கு கடை உரிமையாளர்கள், சுகாதார மின்றி காணப்பட்ட கடை, சமையல் எண் ணெய்யை மீண்டும் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் அபராதம் விதித்தனர். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்று லாத் தலத்தில் அருவி பகுதி, பேருந்து நிலை யம், முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதி களில் உணவகங்கள், இறைச்சி மற்றும் மீன் வறுவல் கடைகள், மீன் விற்பனை நிலையங் கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மீன்க ளின் தரம், மீன் வறுவலுக்கு பயன்படுத்தக் கூடிய எண்ணெய், கடையின் சுற்றுப்புற சுகா தாரம் உள்ளிட்டவை குறித்து பென்னாகரம் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் நந்த கோபால், மீன்வள ஆய்வாளர் வேலுசாமி, மேற்பார்வையாளர் மகேந்திரன் உள்ளிட் டோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மீன்களில் செயற்கை நிறமூட்டியை பயன்படுத்திய 4 கடைகளில் இருந்து 10 கிலோ மீன்கள் கைப் பற்றப்பட்டு தலா ரூ.1,000 வீதமும், மற்றொரு கடையில் வறுவலுக்கு எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதற்கு ரூ.1,000, சுத்தமின்றி காணப்பட்ட கடைக்கு ரூ.2,000 என 6 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கடை களில் வறுவலுக்கு பயன்படுத்தக் கூடிய எண் ணெய்யை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீன் மற்றும் இறைச்சிகளை உரிய கண்ணாடிப் பெட்டி அல்லது தூசிகள் படாத வாறு பாதுகாப்பான முறையில் வைத்து விற் பனை செய்ய வேண்டும். உரிமமின்றி உணவ கங்கள், வறுவல் கடைகளை நடத்தக்கூடாது. மீன் வறுவலுக்கு செயற்கை நிறமூட்டி களை பயன்படுத்தக்கூடாது என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இறைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு

கோபி, பிப்.1- டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட் பட்ட பகுதிகளில் இறைக்கொல்லி பறவை கள் கணக்கெடுக்கும் பணி சனியன்று துவங்கி யது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனச் சரகத்துக்குட்பட்ட நஞ்சை புளியம்பட்டி, பங் களாபுதூர், துறையம்பாளையம், கொங்கர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குளம், ஏரி, கண்மாய்களில் இறைக்கொல்லி பறவை கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை முதல் முறையாக வனத்துறையினர் தொடங்கியுள் ளனர். வனக்காப்பாளர் வனிதாமணி தலை மையில் வனத்துறையினர் மற்றும் தன்னார் வலா்கள் இணைந்து சனியன்று மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும், திங்கள்கிழமை (பிப்.2) காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் என இரண்டு நாள்கள் இரண்டு குழுக்களாக ஏரி, குளங்க ளுக்கு நேரில் சென்றும், வயல்வெளிகள், நீா்நிலை கரைகளுக்கு வாகனங்களில் சென்றும் கணக்கெடுப்புப் பணியில் ஈடு படுகின்றனர்.

4.50 லட்சம் மலர் நாற்றுகள் நடும் பணி துவக்கம்

உதகை, பிப்.1- குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு 50 ரகங்க ளில் 4.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் துவக் கப்பட்டுள்ளன. கோடை சீசனுக்காக ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத் தில் இருந்த பூங்காக்கள் தயார் செய்யும் பணிகள் மேற்கொள் வது வழக்கம். இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டம், குன் னூர் சிம்ஸ் பூங்காவிலும் பல்வேறு ரக மலர் செடிகள் நடவு செய்யும் பணிகளை தோட்டக்கலைத்துறை துவங்கியுள் ளது. தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி பங் கேற்று, மலர் நாற்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத் தார். தொடர்ந்து பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பாத்திகளில் மலர் செடிகள் நடவுப் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சால்வியா ஆண்ட்ரினம், பால் சம், பெக்கோனியா, மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்ட், பேன்சி, பிளாக்ஸ், டெல்பினியம்,லேடி லேஸ், காஸ்மஸ், வின்கா, ஜினியா போன்ற அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட 50க்கும் மேற்பட்ட மலர் செடி வகைகள் மற்றும் 125 மேற்பட்ட நாற்றுகள் என பூங்கா முழுவதும் 4 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் நடும் பணி தற்போது துவங் கப்பட்டுள்ளது.

சட்டக்கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

சேலம், பிப்.1- சேலத்திலுள்ள சட்டக்கல்லூரியில் நடை பெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் பலர் கலந்து கொண்டனர். சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி மற்றும் சென்ட்ரல் லேர்னிங் கேம்பஸ் சிபிஎஸ்இ ரெசி டென்சியல் பள்ளி சார்பில், ‘டிஜிட்டல் திரைக ளுக்கு அப்பால்: சமூக நல்வாழ்வு மற்றும் கருத்தரங்கம்’ (Beyond the Screen: Social Well Being and Culture) என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் ஞாயி றன்று நடைபெற்று. இந்நிகழ்வில், உதவி பேராசிரியர் ஆதில் அகமது வரவேற்புரை யாற்றினார். சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி மற்றும் சென்ட்ரல் லேர்னிங் கேம்பஸ் பள்ளி யின் தலைவரும், தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி பார்கவுன்சிலின் இணைத்தலைவரு மான த.சரவணன் தலைமை வகித்து பேசி னார். இதில் சட்டக்கல்லூரி முதல்வர், பேரா சிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற னர்.