தேசிய பத்திரிகை தினம்: முதலமைச்சர் வாழ்த்து
16 Nov 2025, 3:30 pm
<p><strong>தேசிய பத்திரிகை தினம்: முதலமைச்சர் வாழ்த்து</strong></p>
<p>சென்னை, நவ. 16- தேசிய பத்திரிகை தினத்தை யொட்டி, பத்திரிகைகள் ஜனநாய கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள். அரசியல், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகி யவை பொதுமக்களின் நன்மைக்காக செயல்படும் அமைப்பு கள். இவற்றினால் விளையும் நன்மை-தீமைகள் குறித்து பொதுமக்கள் அறிவதற்கும், சிந்திக்கவும், ஆலோசிக்கவும் பத்திரிகைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று தேசிய பத்திரிகை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் எக்ஸ் தளப் பதிவில், “பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக் கும் சக்தியாக இருக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்பட லாம் அல்லது கைப்பற்றப்படலாம். பாஜக அரசின் சர்வா திகாரத்திற்கு அடிபணிய மறுக்கும் பத்திரிகையாளர்களை பாராட்டுகிறேன். பாஜக அரசின் தோல்வி, ஊழல்கள், வஞ்ச கத்தை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் பத்திரிகையாளர் களுக்கு பாராட்டு” என்று தெரிவித்துள்ளார்.</p>
