தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கியூபா மீதான பொருளாதாரத் தடை

2 Apr 2026, 5:30 am
கியூபா மீதான பொருளாதாரத் தடை

கியூபா மீதான பொருளாதாரத் தடை

ஊனமுற்றோருக்கான தேசிய மேடை கண்டனம். புதுதில்லி: அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபா மீது விதித்து வரும் பொருளாதாரத் தடையையும் அதன் விளைவாக அங்கே வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நரகசமான பாதிப்புகளையும் ஊனமுற்றோருக்கான தேசிய மேடை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒருதலைப்பட்சமான முறையில் பொருளாதாரத் தடையை விதித்திருப்பதன் காரணமாக, கியூபா, உயிர்காக்கும் மருந்துகளையும், முக்கிய மருத்துவத் தொழில்நுட்பங்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் பெறுவது கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் மாற்றுத்திறனாளிகளேயாவர். அவர்கள் தங்களுக்குத் தேவையான செயற்கை உறுப்புகள், செவிப்புலன் கருவிகள், நரம்பியல் நோய்களுக்கான மருந்துகள் கிடைக்காமல் கடும் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களின் மறுசீரமைப்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க சுகாதார அமைப்பு ஒன்றின் அறிக்கையின்படி, சுமார் 50 லட்சம் கியூப நோயாளிகள் மருந்துகள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் 16 ஆயிரம் பேர் புற்றுநோயாளிகளாவார்கள். இவர்களில் 12,400 பேருக்கு மீசோதெரபி சிகிச்சைக்கான மருந்துகள் கிடைக்காததால் அவர்கள் அந்த சிகிச்சையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

பொருளாதார முற்றுகையின் விளைவாக உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதாரச் சீர்குலைக்கும் தீவிரமாகியுள்ளன. இத்தகைய சூழ்நிலைகளில் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இத்துடன், சுகாதாரம், சுத்தமான நீர், ஊட்டச்சத்து, அத்தியாவசிய சேவைகள் ஆகியவை அடிப்படை மனித உரிமைகள் என்று கருதுகிறோம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.