கியூபா மீதான பொருளாதாரத் தடை ஊனமுற்றோருக்கான தேசிய மேடை கண்டனம்
1 Apr 2026, 4:02 pm
<p><strong>கியூபா மீதான பொருளாதாரத் தடை ஊனமுற்றோருக்கான தேசிய மேடை கண்டனம்</strong></p>
<p>புதுதில்லி அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபா மீது திணித்து வரும் பொருளாதாரத் தடையை யும் அதன் விளைவாக அங்கே வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நாசகரமான பாதிப்பு களையும் ஊனமுற்றோருக்கான தேசிய மேடை வன்மையாகக் கண் டித்துள்ளது. இதுதொடர்பாக ஊனமுற்றோ ருக்கான தேசிய மேடையின் பொ துச் செயலாளர் முரளிதரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: கடந்த அறுபது ஆண்டுகளுக் கும் மேலாக அமெரிக்க ஏகாதி பத்தியம் ஒருதலைப்பட்சமான முறையில் பொருளாதாரத் தடை விதித்திருப்பதன் காரணமாக, கியூபா, உயிர்காக்கும் மருந்துக ளையும், முக்கிய மருத்துவத் தொ ழில்நுட்பங்களையும் அத்தியாவ சியப் பொருட்களையும் பெறுவது கடுமையாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளேயாவர். அவர்கள் தங்களுக்குத் தேவை யான செயற்கை உறுப்புகள், செவிப்புலன் கருவிகள், நரம்பியல் நோய்களுக்கான மருந்துகள் கிடை க்காமல் கடும் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களின் மறுசீரமைப்புப் பணி கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. அமெரிக்க சுகாதார அமைப்பு ஒன்றின் அறிக்கையின்படி, சுமார் 50 லட்சம் கியூப நோயாளிகள் மருந்துகள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் 16 ஆயிரம் பேர் புற்று நோயாளிகளாவார்கள். இவர்க ளில் 12,400 பேருக்கு கீமோதெரபி சிகிச்சைக்கான மருந்துகள் கிடைக் க்காததால் அவர்கள் அந்த சிகிச்சை யை நிறுத்த வேண்டிய கட்டா யத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். சுமார் 61,830 குழந்தைகளுக்கு அவர்களுக்குக் காலத்தே செலுத்த வேண்டிய தடுப்பூசிகளைப் போட முடியவில்லை. பொருளாதார முற்றுகையின் விளைவாக உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதாரச் சிர மங்களும் தீவிரமாகியுள்ளன. இத்தகைய சூழ்நிலைகளில் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இத்துடன், சுகாதாரம், சுத்த மான நீர், ஊட்டச்சத்து, அத்தியா வசிய சேவைகள் ஆகியவை அடிப்படை மனித உரிமைகள் என்று கருதுகிறோம். எரிசக்தி முற்றுகையின் மூலம் இந்த உரிமைகளை மறுப்பது ஒரு கூட்டுத் தண்டனையாகும். இது மனித மாண்பின் மீதான தாக்குத லாகும். மேலும் இது மாற்றுத்திற னாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன் படிக்கை உட்பட சர்வதேச மனிதாபி மானச் சட்டத்தின் மீறலாகவும் அமைகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மேடை கியூபா மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதிக்கான உலகளாவிய போராட் டத்தில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. கியூபா மீதான முற்றுகையை உடனடியா கவும் நிபந்தனையின்றியும் நீக்க வேண்டும் என்று அது அறைகூவல் விடுக்கிறது. இந்திய அரசு இந்த ஒருதலைப்பட்சமான வற்புறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இவ்வாறு முரளிதரன் அறிக்கை யில் கூறியுள்ளார். (ந.நி.)</p>
