தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் துறையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு

27 Nov 2025, 3:11 pm
தனியார் துறையிலும்  மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு
<p>புதுதில்லி தனியார்துறையில் வேலைபார்த்திடும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி யிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு வரைவு சட்டமுன்வடிவு கொண்டு வந்தி ருப்பதை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை வரவேற்றிருக்கிறது. இதுதொடர்பாக அதன் பொதுச்செயலா ளர் முரளிதரன் மேலும் கூறியிருப்பதாவது, &ldquo;நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்டுள்ள அறி விப்பு, 2025ஆம் ஆண்டு கர்நாடகா கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டமுன்வடிவின் வரைவு (Karna taka Rights of Persons with Disabilities in Em ployment and Education Bill, 2025), 20 நபர்களுக்கும் மேல் பணிபுரியும் தனியார்துறை நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு அளித்திட வேண்டியது கட்டாயம் என்று கூறியிருக்கிறது.</p> <p>அரசுத்துறைகளில் வேலைவாய்ப்புகள் சுருங்கிக்கொண்டிருக்கக் கூடிய நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப் பட்டுள்ள 4 சதவீத இட ஒதுக்கீடு போதுமான தாக இல்லை. எனவே தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசிய அவசரமாக மாறி இருக்கிறது. இதற்கான ஊன முற்றோருக்கான தேசிய மேடை நீண்ட காலமாகவே கோரி வந்தது. இத்தகைய சூழலில், கர்நாடக அரசு வெளி யிட்டுள்ள இந்த &nbsp;சட்டமுன்வடிவில் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழ கங்கள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களி லும் 10% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்று முன்மொழியப்பட்டிருப்பதை ஊனமுற்றோருக்கான தேசிய மேடை வரவேற்கிறது. இந்த குறிப்பிடத்தக்க முயற்சிக்கு கர்நாடக அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் இந்த சட்டமுன் வடிவு மாநில சட்டமன்றத்தில் விரைவில் அறி முகப்படுத்தப்படுவதை எதிர்நோக்குகிறோம். இது மற்ற மாநிலங்களையும், ஒன்றிய அரசை யும் இதே போன்ற சட்டங்களை அறிமுகப் படுத்தத் தூண்ட வேண்டும்&rdquo; இவ்வாறு முரளி தரன் அறிக்கையில் கூறியுள்ளார். &nbsp; &nbsp; &nbsp; &nbsp;(ந.நி.)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.