பெரம்பலூரில் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டி தொடங்கியது
27 Dec 2025, 4:49 pm
<p><strong>பெரம்பலூரில் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டி தொடங்கியது</strong></p>
<p>பெரம்பலூர், டிச.27- தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மற்றும் இந்திய பள்ளிகள் விளை யாட்டுக் குழுமம் சார்பாக 69ஆவது தேசிய அளவிலான மேசை பந்தாட்டப் போட்டிகள் (பள்ளி அளவிலான) பெரம்பலூரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமை யில், சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபா கரன் மற்றும் காவல் காண்காணிப்பா ளர் ஆதர்ஷ் பசேரா ஆகியோர் முன்னி லையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் எம்ஜிஆர் விளை யாட்டு அரங்கத்தில் டிச.30 வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 36 போட்டியை நடத்தும் தமிழ்நாடு, ஆந்திரா, ஜார்க்கண்ட், மகாராஷ்டி ரா, மேற்கு வங்கம், ஹரியானா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கேர ளா, திரிபுரா, புதுச்சேரி, ராஜஸ்தான், கோவா, கர்நாடகா, பஞ்சாப், மணிப்பூர், சத்தீஸ்கர், நவோதயா வித்யாலயா, பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிர தேசம், ஒடிசா, சிபிஎஸ்இ பள்ளிகள், தெலுங்கானா, ஜம்மு-காஷ்மீர், கேந்திர வித்யாலயா, அசாம், சண்டிகர், வித்யா பாரதி, தில்லி உள்ளிட்ட மாநி லங்கள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் சிஐஎப் (council for the India School), ஐபிஎஸ்சி, ஐபிஎஸ்எஸ்ஓ ஆகிய குழுக்களைச் சேர்ந்த மாணவ -மாணவி கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த தொடர் குழு மற்றும் தனி நபர் (லீக் மற்றும் நாட்கோட்) முறை யில் நடைபெறும். இப்போட்டியில் 178 மாணவர்கள், 171 மாணவிகள் மற்றும் 127 அணி மேலாளர்கள் கலந்து கொள் கின்றனர். போட்டியில் முதல் மூன்று இடம் பெறும் மாணவ - மாணவிகளு க்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்படும். அதே போல போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ - மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன் மற்றும் அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர். </p>
