நிலையான விவசாயத்திற்கான தேசிய அளவிலான கருத்தரங்கம்
6 Dec 2025, 2:48 pm
<p><strong>நிலையான விவசாயத்திற்கான தேசிய அளவிலான கருத்தரங்கம்</strong></p>
<p>பொள்ளாச்சி, டிச.6- நிலையான வேளாண்மைக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் பொள்ளாச்சியில் வெள்ளியன்று தொடங்கி யது. பொள்ளாச்சி அருகே உள்ள மனக்கடவு வானவராயர் வேளாண் கல்லூரியில் நிலையான மேல் தன்மை கொண்ட விவசாயத்திற்கான தேசிய அளவிலான கருத்தரங்கில், பல்வேறு மாநிலங்களில் இருந்து முன்னணி வேளாண் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்றனர். இக்கருத்த ரங்கில், 13 முன்னணி ஆய்வுரைகள் மற்றும் 212 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் பங்கேற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் – வாழை தேசிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் செல்வராஜன், செய்தி யாளர்களிடம் பேசுகையில், வாழை ஆராய்ச்சி மையத் தில் இதுவரை எட்டு வகையான வாழை ரகங்கள் கண்ட றியப்பட்டுள்ளன. இயற்கை சீற்றங்களால் வாழைப் பயிர்கள் சேதமடைவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, ‘காவேரி வாமன்’ என்ற குட்டை ரக வாழை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரகம் அதிக காற்று வீசினாலும் சாயாமல் இருக்கும் தன்மையைக் கொண்ட துடன், அதிக மகசூலையும் அளிக்கக்கூடியது. அதிக உயரம் கொண்ட தேன் வாழையிலும், தற் போது ஆராய்ச்சியின் மூலம் குட்டை ரக தேன் வாழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி போன்ற மாவட்டங்களில் வாழைப் பயிர்களைத் தாக்கும் நோய்க ளுக்குத் தீர்வு காணும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வாழை வகையைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை களில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த புதிய ரகம் ஓரிரு ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும், என் றார்.</p>
