முந்தய பக்கம்

ஓசூரில் தேசிய ஜீட் கியூன் டோ தற்காப்பு கலை போட்டிகள்

20 May 2026, 1:06 am
ஓசூரில் தேசிய ஜீட் கியூன் டோ  தற்காப்பு கலை போட்டிகள்
<p><strong>ஓசூரில் தேசிய ஜீட் கியூன் டோ தற்காப்பு கலை போட்டிகள்</strong> </p><p>கிருஷ்ணகிரி, மே 19 - ஓசூரில் நடைபெற்ற 37 ஆவது தேசிய அளவிலான ஜீட் கியூன் டோ தற்காப்பு கலை போட்டிகளில் 16 மாநிலங்களின் 360 வீரர்கள் பங்கேற்றனர் 50 ஆயிரம் மாநில நிவாரண நிதி அளிக்கப்பட்டது. . ஓசூரில் 37 ஆவது தேசிய அளவிலான ‘ஜீட் கியூன் டோ தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது.16 மாநிலங்களை சேர்ந்த 360 இருபால் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். பரதநாட்டியம் கோலாட்டத்துடன் துவங்கிய விழாவிற்கு தற்காப்பு கலை அமைப்பின் மாநில தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். சிறுவர்,சிறுமியர் குங்ஃபூ ,ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் நிகழ்த்தினர். டெல்லி மாற்றுத்திறனாளி தற்காப்பு கலை வீரர், வீராங்கனைகள் இருசக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தங்களது தற்காப்பு கலைத் திறமைகளை நிகழ்த்தினர். 2 நாட்களும் குங்பூ, கராத்தே,சிலம்பம், டேக்வாண்டோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.அமைப்பின் மாநில தலைவர், தட்சிணாமூர்த்தி முதல மைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50,000 நிதி வழங்கினார்.ஓசூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜேபி (எ) ஜெயபிரகாஷ்,மாநகராட்சி கவுன்சிலர் கும்மி (எ)ஹேம குமார் வெற்றி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram