தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுதில்லியில் ஜூலை 29 தொழிலாளர்-விவசாயிகள் தேசிய மாநாடு மத்திய தொழிற்சங்கங்கள் - சம்யுக்த கிசான் மோர்ச்சா கூட்டாக அறிவிப்பு

1 Jun 2026, 9:58 pm
புதுதில்லியில்  ஜூலை 29 தொழிலாளர்-விவசாயிகள் தேசிய மாநாடு மத்திய தொழிற்சங்கங்கள் - சம்யுக்த கிசான் மோர்ச்சா கூட்டாக அறிவிப்பு

புதுதில்லியில் ஜூலை 29 தொழிலாளர்-விவசாயிகள் தேசிய மாநாடு மத்திய தொழிற்சங்கங்கள் - சம்யுக்த கிசான் மோர்ச்சா கூட்டாக அறிவிப்பு

புதுதில்லியில் ஜூலை 29 தொழிலாளர்-விவசாயிகள் தேசிய மாநாடு மத்திய தொழிற்சங்கங்கள் - சம்யுக்த கிசான் மோர்ச்சா கூட்டாக அறிவிப்பு, அடுத்த கட்ட கூட்டுப் போராட்டங் களை அறிவிப்பதற்காக வரும் ஜூலை 29 அன்று புதுதில்லி தல்கட்டோ ரா மைதானத்தில் “தொழி லாளர்கள் மற்றும் விவசாயி களின் தேசிய மாநாடு” நடத்தப்படும் என்று மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை, சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆகிய அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக புது தில்லியில் கடந்த மே 13 அன்று நடைபெற்ற இரு அமைப்புகளின் ஆலோச னைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், மே 30 அன்று இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் இந்தியா வின் அனைத்து மாநிலங் கள் மற்றும் மாவட்டங் களில் இருந்து பல்லாயிரக் கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாளித்துவக் கொள்கைகளுக்கு எதிராக அடுத்தகட்டப் போராட்டம்

கடந்த பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெற்ற வர லாற்றுச் சிறப்புமிக்க அகில இந்திய பொது வேலைநி றுத்தத்தின் தொடர்ச்சியாக, இந்த தேசிய மாநாடு அமையவுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு கார்ப்பரேட் சக்தி களுக்கும் அடிபணிந்து, இந்தியாவின் இறை யாண்மை, கூட்டாட்சித் தத்து வம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய வற்றை ஆபத்துக்குள்ளா க்கும் ஒன்றிய அரசுக்கு எதி ராகப் பேராற்றல் மிக்க மக்கள் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் இம்மாநாடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக இருக்கும் என்று தொழிற் சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விவசாயத் தொழிலா ளர் சங்கங்களின் கூட்டு மேடையுடன் இணைந்து, நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினர் அனை வரையும் ஒன்றிணைத்து ஒட்டுமொத்த கோரி க்கைகளும் நிறைவேறும் வரை தொடர் போரா ட்டங்களை நடத்த இம்மாநா ட்டில் திட்டமிடப்படவுள்ளது.

முக்கியக் கோரிக்கைகள்

விவசாயப் பாதுகாப்பு: சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி உற்பத்திச் செலவுடன் 50 சதவீத லாபம் சேர்த்து கரும்பு உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் C2+50% அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் சட்டப்பூர்வ கொள்முதல் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கடன் தள்ளுபடி: விவ சாயிகளின் அனைத்துக் கடன்களையும் முழுமை யாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தொழிலாளர் உரிமைகள்: குறைந்தபட்ச ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும்; வேலைவாய்ப்பு உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். சட்டங்கள் நீக்கம்: தொழி லாளர் நலனைப் பறிக்கும் 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் மற்றும் 2025 ஆம் ஆண்டின் விபி ஜி ராம் ஜி சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு: மின்சாரத் துறை யைத் தனியார்மயமாக்கும் முயற்சிகளையும், புதிய விதை மசோதாவையும் கைவிட வேண்டும். 2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்.

தேர்தல் வெற்றியும் மக்கள் மீதான பொருளாதாரச் சுமையும்

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தைத் துஷ்பிரயோகம் செய்தும், கோடிக்கணக்கான ரூபாய் களைக் கொட்டியும் பாசிச முறையில் பெற்ற தேர்தல் வெற்றிகள், மத்திய ஆட்சி யாளர்களின் கண்களை மறைத்துள்ளதாகக் கூட்டறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தத்தின் மூலம் வெளிப்பட்ட மக்களின் கோபத்தில் இருந்து ஒன்றிய அரசு எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை; ஈரான் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியப் போரினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பாதிப்புகள் அனைத்தையும் இந்திய உழைக்கும் மக்கள் மீது ஒன்றிய அரசு ஏற்றி வரு கிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தொடர்ந்து உயர்த்துவதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நகர்ப்புற உழைக்கும் மக்கள் மீண்டும் கிராமங் களை நோக்கி இடம்பெய ரும் அவலம் (Reverse Migration) ஏற்பட்டுள்ளது. உரத் தட்டுப்பாடு நாட்டின் உணவுப் பாது காப்பைக் கேள்விக்குறி யாக்கியுள்ளது. பெரும் கோடீஸ்வரர்கள் மீது கூடுதல் வரி விதிப்பதை விடுத்து, சாதாரண மக்கள் மீது அரசு சிக்கன நட வடிக்கைகளை திணிப்பது அநீதியானது என்று கூட்ட றிக்கை குறிப்பிட்டுள்ளது.

2005 தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் புதைப்பு

தேர்தல் முடிவுகள் வெளி யான ஒரே வாரத்திற்குள், வரலாற்றுச் சிறப்புமிக்க 2005 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தை (MGNREGA) முழுமையாக முடக்கும் வகையில், 2025 விபி ஜி ராம் ஜி சட்ட விதி களையும், தொழிலாளர் குறி யீட்டு விதிகளையும் ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட ‘இந்தியா - நியூசிலாந்து தாராள வர்த்தக ஒப்பந்தம்’ காரணமாக ஜம்மு -காஷ்மீர், இமாச்சலப் பிர தேச ஆப்பிள் விவசாயி கள், பழங்கள் மற்றும் இறைச்சித் துறை சார்ந்தவ ர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இது இந்திய விவசாயத்தையும் தொழில்துறையையும் உலகளாவிய கார்ப்பரேட் வர்த்தக அமைப்பிற்கு நிரந்தர அடிமையாக்கும் செயலாகும்.

அடக்குமுறைக்கு எதிரான வீதிப் போராட்டம்

மறுபுறம், தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழி லாளர்களின் தன்னிச்சை யான எழுச்சி காரணமாக, கடந்த பத்தாண்டுகளாக முடங்கிக் கிடந்த குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்த பல மாநில அரசுகள் கட்டாயப்படுத்தப்பட்டுள் ளன.

அதேநேரம், தொழி லாளர்களின் போராட்ட உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஆர்வ லர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும், காவல்துறையின் கடுமை யான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் அனைத்து ஜனநாயகச் சக்திகளை யும் திரட்டி வீதிப் போரா ட்டங்களை வலுப்படுத்து வது குறித்து இந்த தேசிய மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.