குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி பயிற்சி முகாம்
17 Jul 2026, 9:40 pm
<p><strong>குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி பயிற்சி முகாம்</strong></p><p>மதுரை, ஜூலை 17- குழந்தைகளிடையே ஆய்வு மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில், ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் 32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, “நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்பு கள்” என்ற மையக் கருப்பொருளில் டிசம்பர் மாதம் நடை பெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான மாநில அளவிலான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கி ணைத்து வருகிறது. அறிவியல் மாநாட்டை முன்னிட்டு, வழிகாட்டி ஆசிரி யர்களுக்கான பயிற்சி முகாம் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடை பெற்றது. இப்பயிற்சி முகாமில், மேலூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 83 வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். மாவட்டத் தலைவர் ஆண்டணி பால் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஒச்சுக்காளை வரவேற்றார். திருமங்கலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரெகுபதி, மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தென்கரை முத்துப்பிள்ளை ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்துப் பேசினர். மாவட்டச் செயலாளர் கண்ணன் அறிமுக உரை யாற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி பேராசிரியர் கோபி மணிவண்ணன் இணையம் வழியாக உரையாற்றினார்.. திண்டுக்கல் திண்டுக்கல்லில் பயிற்சி பட்டறைக்கு மாவட்டத் தலைவர் ஆர்.கௌதமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் க.வளர்மதி வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.செல்வக்குமார், பேரா. சோ.மோகனா ஆகியோர் பேசினர். எம்.தியாகராஜன் நிறைவுரையாற்றினார்.</p>
