தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜூன் 10 கோணத்தில் தேசிய பயிற்சியாளர் மேளா 8, 10, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு

5 Jun 2026, 11:00 pm
ஜூன் 10 கோணத்தில் தேசிய பயிற்சியாளர் மேளா 8, 10, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு

ஜூன் 10 கோணத்தில் தேசிய பயிற்சியாளர் மேளா 8, 10, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு

நாகர்கோவில், ஜுன் 5- தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இயக்குநரகம் (RDSDE) சார்பாக நாகர்கோவில், கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூன் 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிரதம மந்திரி தேசிய பயிற்சியாளர் மேளா (Pradhan Mantri National Apprenticeship Mela - PMNAM) நடைபெற உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு நிறு வனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் இம்மேளாவில் பங்கேற்கின்றன.

ITI தேர்ச்சி பெற்றும் இதுவரை Apprenticeship பயிற்சி பெறாத பயிற்சியாளர்கள் மற்றும் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு Apprentices Act, 1961-இன் கீழ் Apprenticeship பயிற்சி வழங்க விரும்பும் தொழில் நிறுவனங்களும் இதில் பங்கேற்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வருட தொழில் பிரிவில் பயிற்சி முடித்தவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,800 உதவித்தொகை. இரண்டு வருட தொழில் பிரிவில் பயிற்சி முடித்தவர்களுக்கு ரூ.12,300 உதவித்தொகை வழங்கப்படும்.

பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு உலகளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு பொதுத்துறை மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கும்.

Apprentices Act, 1961-ன் படி, குறைந்தபட்சம் 30 பணியாளர்களைக் கொண்ட அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் Apprenticeship திட்டத்தை செயல்படுத்துவது கட்டாயமாகும். எனவே, இத்தகைய நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

நேரடி வாய்ப்பு ஐடிஐயில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகளும் நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய பயிற்சியாளர்களாக இணைந்து: 3 முதல் 6 மாத அடிப்படைப் பயிற்சி,1 முதல் 2 ஆண்டுகள் Apprenticeship பயிற்சி பெற்று தேசிய பயிற்சியாளர் சான்றிதழைப் பெறலாம். 4 முதல் 29 பணியாளர்கள் வரை உள்ள தொழில் நிறுவனங்களும் தங்களது விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

மேலும், இத்திட்டத்தில் இணையும் நிறுவனங்களுக்கு ஒரு பயிற்சியாளருக்கான மாதாந்திர உதவித்தொகையில் 25 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் ரூ.1,500 வரை மத்திய அரசால் திருப்பி வழங்கப்படும். எனவே ITI முடித்த பயிற்சியாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பதிவு செய்ய: apprenticeshipindia.gov.in. மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோணம், நாகர்கோவில் தொலைபேசி: 04652-264463 மொபைல்: 9443579558 இல் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.