நத்தம்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அனைத்து மோட்டார் வாகன சங்கங்கள் கோரிக்கை
17 Jun 2026, 9:22 pm

நத்தம்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அனைத்து மோட்டார் வாகன சங்கங்கள் கோரிக்கை

இராஜபாளையம், ஜூன் 17- திருமங்கலம் முதல் முதுகுடி வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி கள் முழுமையாக நிறைவடையாத நிலை யிலேயே, கடந்த திங்கட்கிழமை சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப் பட்டதுடன், நத்தம்பட்டி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியிலும் கட்டண வசூல் தொடங்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை கள் ஆணையம் அரசின் விதிமுறை களை மீறி சுங்கச்சாவடியை செயல்படுத்தி யுள்ளதாக குற்றம்சாட்டி, பல்வேறு தொழிற் சங்கங்கள் மற்றும் வாகன உரிமையாளர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் இராஜபாளையத்தில் நடைபெற்றது. இராஜபாளையம் சிஐடியு டாக்சி வேன் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத் திற்கு சிஐடியு டாக்சி வேன் சங்க செயலா ளர் கண்ணன் தலைமை தாங்கினார்.

விதிமீறல் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், ஒன் றிய அரசின் விதிமுறைகளின்படி ஒரு சுங்கச்சாவடியில் இருந்து குறைந்தபட்சம் 60 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே மற்றொரு சுங்கச்சாவடி அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையில், கப்பலூர் சுங்கச் சாவடியில் இருந்து நத்தம்பட்டி சுங்கச் சாவடி சுமார் 48 கிலோமீட்டர் தொலைவி லேயே அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டி னர்.

மேலும், நான்கு வழிச்சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையி லேயே சுங்கச்சாவடி திறக்கப்பட்டு கட்டண வசூல் தொடங்கப்பட்டிருப்பது ஏற்க முடியா தது எனவும் தெரிவித்தனர்.

தொடர் போராட்டம் இதையடுத்து, நத்தம்பட்டி சுங்கச் சாவடியை அகற்றும் வரை அனைத்து சங் கங்களும் ஒருங்கிணைந்து தொடர் போராட் டங்களில் ஈடுபடுவது என தீர்மானிக்கப் பட்டது.

முதல் கட்டமாக வருகிற ஜூன் 23-ஆம் தேதி சுங்கச்சாவடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட் டது. மேலும், போராட்டங்களை ஒருங்கி ணைக்க அனைத்து சங்கங்களையும் உள் ளடக்கிய போராட்டக் குழு அமைக்கப்பட்டு, அதன் ஒருங்கிணைப்பாளராக சிஐடியு டாக்சி வேன் சங்க செயலாளர் கண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட சாலைப் போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் திருமலை, சிஐடியு மாவட்டத் தலைவர் மகா லட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் கணே சன், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் சோமசுந்தரம், முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சுப்பிர மணி, இராஜபாளையம் தலைவர் விஜய குமார், ஏஐடியுசி பொருளாளர் சரவணன், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலை வர் போஸ், அண்ணா தொழிற்சங்க செயலா ளர் குமார், லாரி உரிமையாளர்கள் சங்க துணைத் தலைவர் மாடசாமி, லோடு வேன் சங்கத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.