தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

களைகட்டிய நத்தம் ஆட்டுச்சந்தை ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

24 May 2026, 11:06 pm
களைகட்டிய நத்தம் ஆட்டுச்சந்தை ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
<p><strong>களைகட்டிய நத்தம் ஆட்டுச்சந்தை ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை</strong></p><p>நத்தம், மே 25- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விற்பனையில் சுமார் ரூ.2 கோடி மதிப்பி லான ஆடுகள் விற்பனை யாகியுள்ளது. நத்தம் ஆட்டுச்சந்தை திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய கால்நடை சந்தை களில் ஒன்றாகும். இங்கு திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர், சிவகங்கை, புதுக் கோட்டை, காரைக்குடி உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடு களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். சாதாரண நாட்களில் வாரத்திற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விற்பனை நடைபெறும் நிலையில், பண்டிகை காலங் களில் விற்பனை அளவு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை உயரும் என்பது குறிப்பிடத் தக்கது. வரும் 28-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட வுள்ளதால், குர்பானிக்காக ஆடுகளை வாங்க அதி காலை முதலே வியாபாரி கள் மற்றும் பொதுமக்கள் சந்தையில் திரண்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகள் மற்றும் வேன்களில் ஆடுகள் கொண்டு வரப்பட்டன. சந்தையில் 10 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், 25 கிலோ எடை யுள்ள ஆடுகள் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை யும் விற்பனையானது. வழக்கமாக 300 முதல் 400 ஆடுகள் வரை விற்ப னையாகும் வாரச்சந்தை யில், இந்த முறை மட்டும் 1500-க்கும் மேற்பட்ட ஆடு கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் ஆடுகள் விற்பனையான தால் விவசாயிகள் மற்றும் கால்நடை வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.