குடிநீர், கழிவறை பற்றாக்குறை நசியனூர் பேரூராட்சி மக்கள் அவதி!
1 Jun 2026, 11:37 pm
<p><strong>குடிநீர், கழிவறை பற்றாக்குறை நசியனூர் பேரூராட்சி மக்கள் அவதி!</strong></p><p>ஈரோடு, ஜூன் 1- ஈரோடு மாவட்டம், நசியனூர் பேரூராட்சிக்குட்பட்ட சிந் தன்குட்டையில் குடிநீர் மற்றும் கழிப்பிடப் பற்றாக்குறை யால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியின் 14-ஆவது வார்டில் நெசவாளர் காலனி, பட்டியலினத்தவர் குடியிருப்பு மற்றும் அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள இரண்டு மேல்நிலைத் தொட்டிகள் மூலம் விநியோ கிக்கப்படும் தண்ணீர் தற்போதைய தேவைக்குப் போதுமான தாக இல்லை. எனவே, புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இப்பகுதியின் அடித்தளம் பாறைகள் நிறைந்தது என்பதால், தனிநபர் கழிப்பிடம் கட்ட முடியாத சூழல் உள் ளது. தற்போதுள்ள பொதுக் கழிப்பிடத்தில் ஆண்களுக் கும், பெண்களுக்கும் தலா இரண்டு அறைகள் மட்டுமே உள்ளதால், காலை நேரங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்தி ருக்க வேண்டியுள்ளது. இதனால், பலர் திறந்தவெளியை நாடும் அவலம் தொடர்கிறது. இப்பகுதி மக்களின் சிரமங் களை கருத்தில் கொண்டு 20 அறைகள் கொண்ட புதிய பொதுக் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வார்டு கவுன்சிலர் தங்க வேலு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, வரும் புதிய திட்டங்களில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்தனர்.</p>
