தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

துணிவை இழக்காதீர்கள், தொடர்ந்து போராடுங்கள் - நடிகர் நடிகர் நசீருதீன் ஷா

1 hour before
துணிவை இழக்காதீர்கள், தொடர்ந்து போராடுங்கள் - நடிகர் நடிகர் நசீருதீன் ஷா

நீட் வினாத்தாள் கசிவு, சீர்கெட்டு வரும் கல்வி முறை ஆகியவற்றுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்திப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மூத்த நடிகர் நசீருதீன் ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில் அவர் கூறியதாவது:

"அறிவற்ற ஒருவர் இந்நாட்டை வழிநடத்தினால், ஒட்டுமொத்த நாடும் அதேபோல அறிவற்றதாகவும், சிந்திக்கும் திறன் அற்றதாகவும், பயனற்றதாகவும், இரக்கமற்றதாகவும் மாறவே அவர் விரும்புவார். முகமூடி அணிந்து தடிகளுடன் அமெரிக்காவின் ICE அதிகாரிகளை போலச் செயல்படும் குண்டர்களால் நம் பிள்ளைகள் கொடூரமாக நடத்தப்படுவதைக் காணும்போது, ​​என் மனம் கனக்கிறது; அதே சமயம் கடும் கோபமும் கொள்கிறேன். சில சமயங்களிலாவது உங்கள் சொந்த பிள்ளைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்; நீங்களும் ஒரு நாள் உங்கள் விதியைச் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த பிள்ளைகள் அனைவருக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: துணிவை இழக்காதீர்கள்; பலரின் அனுதாபமும் ஆதரவும் உங்களுக்கு உண்டு. பலர் உங்களுடன் இருக்கிறார்கள். தொடர்ந்து போராடுங்கள். நம் நாட்டின் இளைஞர்கள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தது; இப்போது அந்த நம்பிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் போராட்டத்தைத் தொடருங்கள். நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்.

இந்நாட்டு அரசாங்கத்திடம் நான் இதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன் – அனைத்தும் நினைவில் கொள்ளப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.