தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டா வழங்கக்கோரி நரியூத்து மலை கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

14 Aug 2026, 9:23 pm
பட்டா வழங்கக்கோரி நரியூத்து மலை கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

பட்டா வழங்கக்கோரி நரியூத்து மலை கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

கடமலைக்குண்டு, ஆக.14- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட நரியூத்து மலை கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

மூன்று தலைமுறைகளாக இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு பட்டா வழங்கப்படாத நிலையில் கண்டமனூர் வனத்துறை இந்த பகுதி முழுவதும்வனத்துறைக்கு கட்டுப்பட்டு வருவதாக கூறி பல்வேறு இடையூறுகளை மலை கிராம மக்களுக்கு ஏற்படுத்திவருகிறது. 80 ஆண்டுகளாக இந்த கிராமத்திற்கு பயன்பாட்டில் இருந்து வந்த வருசநாடு சாலையில் இருந்து நரியூத்து கிராமம் வரை செல்லும் சாலையையும் முழுமையாக போடவிடாமல் தடுத்து நிறுத்தி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

தமிழக அரசு பட்டா வழங்க வலியுறுத்தியும் புதுப்பிக்கப்படாத சாலை வசதிகளை புதுப்பித்து கொடுக்க வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலை கிராமம் முழுவதும் வீடுகள், தெருக்கள் தோறும் கருப்புக் கொடிகள் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.