தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ், குடிமனைப் பட்டா ததீஒமு போராட்டம்!

yesterday
நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ், குடிமனைப் பட்டா ததீஒமு போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு இந்து ஆதியன் சாதிச் சான்றிதழ் மற்றும் குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

நரிக்குறவர் இன மக்களுக்கு நீண்டகாலமாக சாதிச் சான்றிதழ் மற்றும் குடிமனைப் பட்டா வழங்கப்படாததால், கல்வி, இடஒதுக்கீடு, உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற முடியாமல் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் பங்கேற்றனர்.

இப்போராட்டத்தில் தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் (DSMM) அகில இந்திய துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், ததீஒமு மாவட்டத் தலைவர் சி.அன்புமணவாளன், மாவட்டப் பொருளாளர் சி.ஜீவானந்தம், மற்றும் நிர்வாகிகள் எம்.ஏ.ரகுமான், எஸ்.நல்லதம்பி, கே.முகமதலி ஜின்னா, கி.ஜெயபாலன், கே.சண்முகம், அ.மணவாளன், சிபிஎம் மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பது, கந்தர்வகோட்டை பகுதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கி குடிமனைப் பட்டா மற்றும் இலவச வீடு வழங்குவது, புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வசந்தி, அஞ்சுகம் ஆகியோருக்கு உடனடியாக சாதிச் சான்றிதழ் வழங்குவது, மீதமுள்ள 77 பேரின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உறுதிமொழியை ஏற்று காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.