தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செங்கோட்டையில் அம்பலப்பட்ட நரேந்திர மோடியின் இயலாமை

17 Aug 2026, 9:41 pm
செங்கோட்டையில் அம்பலப்பட்ட நரேந்திர மோடியின் இயலாமை

செங்கோட்டையில் அம்பலப்பட்ட நரேந்திர மோடியின் இயலாமை

பிரதமர் நரேந்திர மோடி, தன் வசம் இருந்த“கட்டமைக்கப்பட்ட ஈர்ப்பு” சக்தியை முற்றிலுமாக இழந்துவிட்டதை அவரது 13-வது செங்கோட்டை உரை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. ஜந்தர் மந்தரில் திரண்ட இளைய தலைமுறையினரின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான ஒடுக்குமுறைகளும், அயோத்தி ராமர் கோயிலில்அரங்கேறிய ஊழல்களும் இந்தநாட்டின் தார்மீக முதுகெலும்பை உடைத்தெறிந்துள்ளன. மதவாத தேசியவாதத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையில், தனது அடிமட்ட ஆதரவாளர்களுக்குத் தன் செல்வாக்குக் குறையவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு மோடி தள்ளப்பட்டுள்ளார்.

வழக்கம்போல சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதும், கடந்த காலங்களுடன் புள்ளிவிவரங்களை ஒப்பீடு செய்வதும் அலுப்பூட்டும் சடங்காக மாறியுள்ளது. விக்சித் பாரத் மற்றும்ஆத்மநிர்பார் பாரத் போன்ற முழக்கங்கள் வெறும் வெற்றுச் சொற்களாகச் சுருங்கிவிட்டன. இளைஞர்களின்வேலைவாய்ப்பின்மை மற்றும்எதிர்காலம் குறித்த அச்சங்களை எதிர்கொள்ளாமல், இலவச ஆன்லைன் கோச்சிங் போன்ற அற்பவாக்குறுதிகள் மூலம் அவர்களை ஏமாற்ற முயல்வது எடுபடாது.

இந்த முறை தனது உரையில் வழக்கமான பாகிஸ்தான் எதிர்ப்பு, பயங்கரவாதப் பேச்சுக்கள் அல்லது வெறித்தனமான தேசியவாத வெளிப்பாடுகளைத் தவிர்த்துள்ளார். பிரிவினைவாதக் கருத்துக்களைத் தீவிரமாகப்பரப்புபவர்களின் கூச்சல்கள்மக்களிடையே மிகப்பெரிய வெறுப்பைஏற்படுத்தியுள்ளதை உணர்ந்தே பிரதமர் இந்தமௌனத்தைக் கடைப்பிடித்துள்ளார். இந்துத்துவத்தின் பெயரால் நடத்தப்படும் நாடகங்களும், ஊழல்களும் மக்களின் நம்பிக்கையை முழுமையாகச் சிதைத்துள்ளன.

மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அரசின் சாதனைகள் அனைத்தும் ஒருசில பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்பட்டுள்ளதே தவிர, அடிமட்ட எளிய மக்களின்வாழ்க்கைத் தரத்தை உயர்த்தசிறிதும் உதவவில்லை.

தேசத்தின் உண்மையான பிரச்சனைகளான வேலையின்மை, வறுமை மற்றும் விலைவாசிஉயர்வு பற்றிக் கவலைப்படாமல், அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பும் முற்போக்காளர்களையும் அறிஞர்களையும் “அறிவு ஜீவி நக்சல்கள்” என்று முத்திரை குத்தி ஒடுக்க நினைக்கும் அவரது குறுகிய அரசியல்தந்திரம் கண்டனத்திற்குரியது. மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் குரல் கொடுப்பவர்களை நக்சல் சிந்தனையாளர்கள் என்று கூறி குறிவைப்பது, உச்சக்கட்ட எதேச்சதிகாரப் போக்கின்வெளிப்பாடேயன்றி வேறில்லை.

சமூகத்தின் அடிமட்ட மக்களின் அதிருப்தியையும், இளைஞர்களின் ஆத்திரத்தையும் மறைக்க முயன்றாலும், தற்போதைய ஆட்சி அதன் ‘கவர்ச்சியை’இழந்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.