தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கால் நூற்றாண்டின் கருப்பு அத்தியாயம்

8 Oct 2026, 10:04 pm
கால் நூற்றாண்டின் கருப்பு அத்தியாயம்

கால் நூற்றாண்டின் கருப்பு அத்தியாயம்

2001 அக்டோபர் 7 அன்று குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, அரசுத்தலைமையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். ‘சேவா ஜோதி யாத்திரை’, தீப்பந்தப் பேரணிகள் என நாடெங்கும் பாஜக இதைக் கொண்டாடுகிறது. ஆனால் ஜனநாயகத்தின் கண்ணோட்டத்தில் இந்தக் கால் நூற்றாண்டு கொண்டாட்டத்துக்குரியதல்ல; கணக்குக் கேட்கப்பட வேண்டியது.

பதவியேற்று ஐந்து மாதங்களுக்குள் குஜராத் பற்றியெரிந்தது. 2002 வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டனர். “ராஜ தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்” என்றுஅன்றைய பிரதமர் வாஜ்பாயே அறிவுறுத்த நேர்ந்தது. வெறுப்பை அறுவடை செய்து அதிகாரம் பெறும் மோடியின் அந்த அரசியல் முன்மாதிரியே பின்னர் தேசிய அளவுக்கு விரிந்தது.

2016 நவம்பர் 8 இரவு அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம் கறுப்புப் பணத்தை ஒழிக்கவில்லை; செல்லாததாக்கப்பட்ட நோட்டுகளில் 99.3 சதவீதம் வங்கிகளுக்கே திரும்பியதாக ரிசர்வ் வங்கியேஒப்புக்கொண்டது. வங்கி வரிசைகளில் உயிர்கள்பறிபோயின; சிறு, குறு தொழில்கள் முடங்கின. அவை எழுவதற்குள் அவசரகதியில் திணிக்கப்பட்ட ஜிஎஸ்டி அவற்றின் கழுத்தை நெரித்தது; மாநிலங்களின் நிதி உரிமையையும் பறித்தது.

வெறும் நான்கு மணி நேர அவகாசத்தில் அறிவிக்கப்பட்ட கொரோனா பொதுமுடக்கம் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடக்க வைத்தது. இரண்டாம் அலையில் ஆக்சிஜன் இன்றி மக்கள் மடிந்தனர். இந்தியாவில் 47 லட்சம் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்ததாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டது; மோடி அரசு அதை மறுத்ததே தவிர, பொறுப்பேற்கவில்லை.

வளர்ச்சி என்ற முழக்கத்தின் பலன் ஒரு சில கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் கைகளில் குவிந்

தது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி வெற்று முழக்கமாகவே நிற்கிறது.

கும்பல் கொலைகள், குடியுரிமைத் திருத்தச்சட்டம், வக்பு திருத்தம், எரியும் மணிப்பூர் எனசிறுபான்மையினர் தொடர்ந்து குறிவைக்கப்படுகின்றனர். ஜம்மு- காஷ்மீர் மக்களின் கருத்தைக் கேட்காமலேயே அதன் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு, ஒரு மாநிலமே இரண்டு யூனியன் பிரதேசங்களாகச் சிதைக்கப்பட்டது. ஆளுநர்கள் மூலம் எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகள் முடக்கப்படுகின்றன; கூட்டாட்சித் தத்துவம் சிதைக்கப்படுகிறது. அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணைஅமைப்புகள் எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் கருவிகளாயின. இப்போது அந்த வரிசையில் தேர்தல்ஆணையமும் சேர்ந்திருக்கிறது. எஸ்ஐஆர் பெயரில் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.

வாக்கும் நாடாளுமன்றமும் நீதிமன்றமும் ஊடகமும் ஒவ்வொன்றாக வளைக்கப்படும்போது ஜனநாயகம் வெறும் சடங்காகிறது. இதுதான் நவீன பாசிசப் பாதை. அதற்கு வித்திட்ட மோடியின் கால் நூற்றாண்டுக் கொண்டாட்ட ஒளிக்குப் பின்னால் இருப்பது சுதந்திர இந்திய வரலாற்றின் கருப்புஅத்தியாயம். அதை முடித்து வைப்பது மக்கள் இயக்கங்களின் கடமை.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.