வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் பிவாடி நெபினோ ஆலை வேலைநிறுத்தம்
26 May 2026, 9:37 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் பிவாடி நெபினோ ஆலை வேலைநிறுத்தம்

கார்ப்பரேட் நிர்வாகத்தை வீழ்த்திய தொழிலாளர் மனிதச் சங்கிலிப் போராட்டம்!

வேலைநிறுத்தம் 35

பிவாடி, மே 26- ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச எல்லைகளை ஒட்டிய ராஜஸ்தானின் அல்வார்-பிவாடி தொழில் மண்ட லத்தில், வாகன உதிரிபாக உற்பத்தி நிறு வனங்களில் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி புதிய வடிவங்களை எடுத்து வருகிறது. பிவாடி தொழில் மண்டலத்தில் அமைந்துள்ள நெபினோ ஆட்டோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் (Napino Auto & Electronics Ltd.) ஆலையில், நீண்டகாலமாக நிலுவை யில் உள்ள ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர் பழிவாங்கலுக்கு எதிராக நடைபெற்ற இரு வார காலத் தொடர் வேலைநிறுத்தம், வாகன உதிரிபாக விநியோக சங்கிலியை முற்றிலும் முடக்கியுள்ளது.

இருசக்கர வாகனங்களுக்கான மின்சார மற்றும் மின்னணு உதிரிபா கங்களைத் தயாரிப்பதில் முன்னணி யில் இருக்கும் நெபினோ நிறுவனத்தின் பிவாடி ஆலையில், கடந்த ஏப்ரல் மாத மத்தியில் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தது.

நான்கு ஆண்டுகால இழுபறியும் இடைநீக்கமும்

நெபினோ ஆலையின் தொழிலாளர் தரப்பு, தங்களின் புதிய நீண்டகால ஊதிய திருத்த ஒப்பந்தக் கோரிக்கை மனுவை (Maang Patra) தாக்கல் செய்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும், கார்ப்பரேட் நிர்வாகம், அதனைத் திட்டமிட்டுத் தாமதப்படுத்தி வந்தது. இந்த நீண்டகால அதிருப்தி க்கு இடையே, ஆலை நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் தொழிற்சங்க உறுப்பினர்கள் 6 பேரைத் தன்னிச்சையாக வேலை இடை நீக்கம் செய்தது. இந்த நடவடிக்கை தொழிலாளர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக இருந்த கோபத்தை உக்கிர மான போராட்டமாக மாற்றியது.

இதற்கிடையில், அண்டை மாநி லங்களான ஹரியானாவில் 35 சத வீதமும், உத்தரப் பிரதேசத்தின் நொய் டாவில் 21 சதவீதமும் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டதால், எல்லை யோர ராஜஸ்தான் தொழிலாளர்கள் தங்களுக்கு 8 மணி நேர வேலைக்கு 20,000 ரூபாய் அடிப்படை ஊதியம் வழங்கக் கோரி அண்டை ஆலை களான மதர்சன் சுமி, ரிலாக்சோ, நிப்பான் ஆகியவற்றின் தொழிலாள ர்களுடன் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

உற்பத்தி முடக்கமும் ஆலை வாயில் முற்றுகையும்

தொழிலாளர் நலத்துறையின் சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, நெபினோ நிறுவனத்தின் முதன்மை ஆலையான மானேசரில் தொழிலாளர்கள் ஏப்ரல் 13 அன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, பிவாடி உள்ளிட்ட துணை ஆலைகளின் தொழி லாளர்களும் உற்பத்தியை முழுமை யாக முடக்கிப் போராட்டத்தில் குதித்தனர்.

ஏப்ரல் 18 முதல் 22 வரையிலான காலகட்டத்தில் இப்போராட்டம் தீவிர மடைந்தது. ஏப்ரல் 18 அன்று, சேமிப்புக் கிடங்குகளில் ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த உதிரிபாகங்களை வெளியேற்றி விநியோகம் செய்ய ஆலை அதிகாரிகள் முயன்றனர். இதனை முன்கூட்டியே அறிந்த தொழிலாளர்கள் ஆலை வாயில் களில் திரண்டு மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தி, வாகனங்கள் உள்ளே நுழைவதை யும் வெளியேறுவதையும் முற்றிலும் தடுத்தனர். நிலைமை கட்டுக்கடங்கா மல் சென்றதால், தொழிற்துறைப் பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான காவல் படையினர் குவிக்கப்பட்டனர்.

முறியடிக்கப்பட்ட கார்ப்பரேட் சூழ்ச்சியும் வர்க்க ஒற்றுமையும்

ஆலையின் மொத்த உழைப்புச் சக்தியில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் களைப் பயன்படுத்தி, பகுதி அளவிலா வது உற்பத்தியைத் தொடர நிர்வாகம் சூழ்ச்சி செய்தது. ஒப்பந்த நிறுவனங் களின் பணிநீக்க அச்சுறுத்தல் மற்றும் ‘வேலையில்லை எனில் கூலி இல்லை’ (No-Work-No-Pay) என்ற நெருக் கடி காரணமாக ஒப்பந்தத் தொழிலாளர் களால் அதிகாரப்பூர்வமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியவில்லை.

ஆயினும், நிரந்தரத் தொழி லாளர்கள் ஆலை வாயிலில் மனிதச் சங்கிலி அமைத்துப் போராடியபோது, ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சிப் பணியாளர்கள் (Apprentices) எவரும் நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்குப் பணிய மறுத்து, மாற்று உழைப்பாளர்களாகச் செயல்பட மாட்டோம் (Strike bre akers) எனப் பின்வாங்கினர். “ஒப்பந்த உழைப்பு என்பது வெறும் வேலைக் கானது அல்ல; தொழிலாளர் வர்க்க ஒற்றுமையே முதன்மையானது” என்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் முழக்கத்திற்கு ஏற்ப, ஒப்பந்தத் தொழிலாளர்களின் இந்த மறைமுக ஆதரவு ஆலையின் உற்பத்தியை 100 சதவீதம் முடக்கியது.

தற்போதைய ஒப்பந்த நிலவரம்

இரண்டு வாரங்களுக்கும் மேலாக உற்பத்தி முழுமையாக ஸ்தம்பி த்ததாலும், அண்டை ஆலைகளின் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரிலாக்சோ சவுக் (Relaxo Chowk) உள்ளிட்ட முக்கியச் சந்திப்புகளை முடக்கிப் போராடிய தாலும் நிர்வாகம் கடுமையான நெருக்கடிக்குள்ளானது. இறுதியாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், நிலுவையில் உள்ள நீண்டகால ஊதிய ஒப்பந்த த்தை உடனடியாக பரிசீலிக்கவும், இடைநீக்கம் செய்யப்பட்ட 6 தொழி லாளர்களின் விவகாரத்தை முறை யான விசாரணைக்குழு மூலம் தீர்க்க வும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, ராஜஸ்தான் அரசு மாநில அளவிலான ஊதிய உயர்வை இன்னும் அறிவிக்காததால், நெபினோ நிர்வாகம் தற்காலிகமாக சில கூடுதல் படிகளையும், 8 மணி நேர வேலை நேரக் கட்டுப்பாட்டையும் கட்டாய மாக அமல்படுத்துவதாக உறுதி யளித்துள்ளது. இதன் மூலம் இருவார காலப் போராட்டம் தற்காலிகமாக முடி வுக்கு வந்து, ஆலைகளில் உற்பத்திப் பணிகள் படிப்படியாகத் துவங்கி யுள்ளன. தி லெப்ட் வியூஸ்