நன்னிலம் வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு
8 Apr 2026, 5:30 am

நன்னிலம் வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

திருவாரூர், ஏப். 7- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியம் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் முகமது முபாரக், இடிச்சக்கூர் வாகன மூலம் சென்று அப்பகுதி மக்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

நன்னிலம் ஒன்றியம் ஆண்டிப்பந்தலில் துவங்கிய பிரச்சார பயணத்தில் பங்கேற்ற சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி பிரச்சாரத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து ஸ்ரீவாஞ்சியத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஐ தாலுகா துணைச் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்று உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டனர்.

வாக்குச் சேகரிப்பில் திமுக நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வே. மனோகரன், திருவாரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ். குமார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தியாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெ. முகமது உதுமான் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.