தென்மண்டல தடகளப் போட்டியில் நாஞ்சில் கல்லூரி மாணவி சாதனை
30 Sept 2026, 9:24 pm

தென்மண்டல தடகளப் போட்டியில் நாஞ்சில் கல்லூரி மாணவி சாதனை

அருமனை,செப். 30 -புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான தென்மண்டல தடகளப் போட்டியில், களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை - அறிவியல் கல்லூரி மாணவி ஜே.வி.ஜோஷ்னா சாதனை படைத்துள்ளார்.கல்லூரியின் ஆங்கிலத் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் ஜோஷ்னா, 18 வய

திற்குட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடத்தை வென்றார். கடந்த நான்கு ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.இதற்கு முன்பாக தமிழ்நாடு மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் ஈட்டி

எறிதல் போட்டியிலும் ஜோஷ்னா முதல்பரிசுவென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கல்லூரிக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி ஜோஷ்னாவை, கல்லூரி செயலர் அருட்தந்தை முனைவர்சி.ஸ்டீபன், கல்லூரி முதல்வர் முனைவர் எம். அமலநாதன், உடற்கல்வித் துறை இயக்குநர் லாரன்ஸ், துறைத்தலைவர் தேசபந்து, துறை பேராசிரியர் அன்புராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.