நாங்குநேரி அருகே பாப்பாங்குளத்தில் பறவைகள் சரணாலயம் - விளைநிலங்களை நாசமாக்கும் கல் குவாரியை மூடக்கோரி போராடியவர்கள் கைது
23 Sept 2026, 10:04 pm

நாங்குநேரி அருகே பாப்பாங்குளத்தில் பறவைகள் சரணாலயம் - விளைநிலங்களை நாசமாக்கும் கல் குவாரியை மூடக்கோரி போராடியவர்கள் கைது

சிபிஎம் கண்டனம் திருநெல்வேலி, செப்.23-நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பாப்பாங்குளத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர் .மூன்றாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடக்குப்பாப்பாங்குளத்தில் புதியதாக தனியார் கல்குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குவாரி அமைக்கப்பட்டால் அங்கு வெடித்து வைத்து பாறைகளை உடைப்பதினால் ஏற்படும் அதிர்வுகளால் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமடையும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் பாப்பாங்குளம் கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் தான் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வாழும் வெளிநாட்டு பறவைகளுக்காக அவ்வூர் மக்கள் கோயில் கொடை விழாக்களிலும், வீட்டு சுபநிகழ்ச்சிகளிலும் கூட பட்டாசுகள் வெடிப்பதில்லை.

எனவே கல்குவாரியால் வெளிநாட்டு பறவைகளுக்கு ஆபத்து ஏற்படுவதுடன், பறவைகள் சரணாலயமும் அழியும் நிலை உருவாகும், அத்துடன் விளை நிலங்கள் நாசமாகும் என்றும் அஞ்சுகின்றனர். எனவே குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாப்பாங்குளத்தில் கிராம மக்கள் கடந்த 18 ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ,கல்குவாரி செயல்படாது என கிராம மக்களிடம் உறுதியளித்தனர். ஆனால் திங்கட்கிழமை முதல் கல்குவாரி செயல்பட தொடங்கியது.

இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் கல்குவாரி முன் திரண்டு, கைகளில் கருப்புக் கொடி ஏந்தி கொளுத்தும் வெயிலில் போராட்டம் நடத்தினர். மேலும் கல்குவாரியை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து போலீசாரும், வருவாய்துறையினரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்றும் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது.

கல்குவாரி மூடும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்து புதன்கிழமை அன்று மூன்றாவது நாளாக மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர், பாப்பாங்குளம் அருகே செயல்பட்டு வரும் கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது சரியான நடவடிக்கை அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.