தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நங்காஞ்சியாற்றில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

11 Oct 2026, 9:27 pm
நங்காஞ்சியாற்றில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

நங்காஞ்சியாற்றில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

அகற்றவும், அணையைத் தூர்வாரவும் விவசாயிகள் வலியுறுத்தல்

ஒட்டன்சத்திரம், அக்.11-திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணையிலிருந்து வரும்நீர், நங்காஞ்சியாறு அணையைச் சென்றடைகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது அணை அதன் முழுக் கொள்ளளவான 39.97 அடியை எட்டியது. இந்த அணையின் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் சுமார் 6,250 ஏக்கர் விவசாய நிலங்கள்பாசன வசதி பெறுகின்றன. சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.கடந்த 2 ஆண்டுகளாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் போதிய மழை பெய்யாததாலும், கடும் வெயிலாலும் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. தற்போது அணையின் பள்ளமான பகுதிகளில் மட்டுமே சுமார் 10 அடி தண்ணீர் தேங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இதுகுறித்து அரசப்பபிள்ளைபட்டியைச் சேர்ந்த விவசாயி ஜோதிமுத்து கூறுகையில், “வடகிழக்குப் பருவ மழைக்கு முன்பாகப் பரப்பலாறு, நங்காஞ்சியாறு அணைகளைத் தூர்வார வேண்டும்.ஆற் றில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங் களை அகற்றி, குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களைச்சீரமைக்க வேண்டும். அணைக்கரைகளைப் பலப்படுத்தி, நீரை முழுமையாகச் சேமிக்கும் வகையில் பொதுப் பணித் துறை மற்றும் நீர்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.மேலும், நங்காஞ்சியாறு அணையைச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தி, சாலை, விளையாட்டுப் பூங்கா, நவீனகழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.