சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விழாவில் நந்தனார் பட வீதிஉலா!
3 Jan 2026, 4:57 pm
<p><strong>சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விழாவில் நந்தனார் பட வீதிஉலா!</strong></p>
<p>சிதம்பரம், ஜன. 3- சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழாவில், 63 நாயன்மார்க ளில் ஒருவரான ஸ்ரீநந்தனார் பட வீதிஉலா சனிக்கிழமை நடைபெற்றது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கி ணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போது, சுவாமி சகஜானந்தா அவர்கள் ஏழை எளிய மக்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி கல்விதான் என்ற உயரிய சிந்தனையில், நந்தனார் பெயரில் கல்வி நிறுவனங்களை நிறுவினார். தற்போது சிதம்பரத்தில் விடுதி வசதி யுடன் நந்தனார் பெயரில் இருபாலர் மேல்நிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளி, தொழிற்பயிற்சி நிறுவனம் எனச் சிறப்பாக இயங்கி வருகின்றன. இதில் கல்வி பயின்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு நிலைகளில் உயர்ந்துள்ளனர். இந்த நிலையில், நந்தனாரின் புகழ் ஓங்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இருமுறை நடை பெறும் தரிசன விழாவின் போது, நந்தனார் பட ஊர்வலம் நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழாவில் சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்திலிருந்து நந்தனார் பட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் சிதம்பரம் தெற்கு சன்னதியை அடைந்தபோது, நந்தனார் கல்விக் கழகத் தலைவர் கே.ஐ. மணி ரத்தினம் தலைமையில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், சமத்துவ மக்கள் படை நிறுவனருமான ப. சிவகாமி ஊர்வ லத்தைத் தொடங்கி வைத்தார். நந்தனார் பட ஊர்வலம் கீழ வீதி, மேல வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி என நான்கு வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க வலம் வந்து மீண்டும் மடத்தை அடைந்தது. கீழச் சன்னதியில் நந்தனாருக்கு நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. ஊர்வலத்தில் நந்தனார் கல்விக் கழகப் பொருளாளர் டி. ஜெயச்சந்திரன், செய லாளர் வி. திருவாசகம், டிரஸ்ட் செயலாளர் டி.கே.எம். வினோபா, நிர்வாகிகள் கஜேந்திரன், மணலூர் ரவி, இளைய அன்பழகன், பி. பன்னீர்செல்வம், கே. கனகசபை, டி. தெய்வசிகாமணி, கற்பனை செல்வம், தமிழரசன் உள்ளிட்ட நந்தனார் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
