‘நந்தன் 2’ இப்போது அவசியமாகப்படுகிறது!
31 Jan 2026, 5:27 pm
<p><strong>‘நந்தன் 2’ இப்போது அவசியமாகப்படுகிறது!</strong></p>
<p>‘ஒரு படத்தை எடுத்திட்டு இந்தப் பாடு படுத்துறானே’ என எண்ணிவிடாதீர்கள். ‘நந்தன்’ படத்தின் இறுதியில் இன்றைய நிஜ தலித் பஞ்சாயத்து தலைவர்களின் நிலை என நான் வரிசையாக முன்னிறுத்திய பலரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எல்ராம்பட்டு பஞ்சாயத்து தலைவி திருமதி வித்யா முக்கியமானவர். அவருடைய கண்ணீருடன் தான் ‘நந்தன்’ படம் முடியும். அவர் குடியரசு தினத்தில் புதிய பஞ்சாயத்து அலுவலகத்தில் முதன் முறையாய் கொடியேற்றி, அந்த மகிழ்வைக் குரல் பதிவாக அனுப்பி இருந்தார். புதிய பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைய அவர் பட்ட பாடுகளையும், கிராமத்திற்குள் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் என்னிடம் நிறைய சொல்லி இருக்கி றார். ‘நந்தன்’ படம் அதிகாரிகள் மத்தியில் உருவாக்கிய தாக்கத்தை அடிக்கடி முன்னுதாரண சம்பவங்களுடன் என்னி டம் பகிர்வார். எல்லா சூழலும் சரியாகி எவ்விதப் பிரச்னை களும் இன்றி நேற்று (ஜன.26 இல்) அவர் கொடியேற்றிய நெகிழ்வு பெரும் நிம்மதியைத் தருகிறது. அவர் மட்டும் அல்லாது ஒடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் உற்சாகமாகக் கொடியேற்றும் படங்களை எனக்கு அனுப்பி இருந்தார்கள். தலித் பஞ்சாயத்து தலைவர்கள்எல்லோரும் கொடி யேற்றிய நெகிழ்வு மனதைச் சிலிர்க்க வைத்தாலும், இதனைச் சாத்தியமாக்க 77 வருடங்களை நாம் கடக்கவேண்டி இருந்தி ருக்கிறதே என்கிற வேதனையும் எட்டிப் பார்க்கத்தான் செய்கி றது. ‘நந்தன்’ படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் இந்த மண்ணில் அதன் தாக்கம் அணையாமல் இருப்ப தில் பெரும் நிம்மதி. இரு தினங்களுக்கு முன் சசிகுமார் சார் வீட்டில் சமுத்தி ரக்கனி சாரும் நானும் சந்தித்தோம். பார்த்த மாத்திரத்தில், “சரவணன், ‘நந்தன் 2’ எப்போ பண்றோம்? நான் ரெடியா இருக்கேன்” என்றார். ‘நந்தன் 2’ குறித்து சமுத்திரக்கனி சார் எத்தனையோ முறை பேசி இருக்கிறார். நான் அமைதியாகக் கடப்பேன். ஒருமுறை எக்ஸ் தள உரையாடலில் கனி சார் இதுகுறித்து பொதுவெளியில் கேட்க, “நந்தன் 2 பண்ண எனக்கு சக்தி இல்லை சார்” எனப் பின்வாங்கினேன். சசி குமார் சார் இதற்காக ஒவ்வொரு முறை வலியுறுத்தும் போதும், “வேணாம் சார்” என ஓடிவிடுவேன். நேற்று (ஜன.26 இல்) பல தலித் பஞ்சாயத்து தலைவர்களிடம் பேசியதும், திருமதி வித்யா அவர்களின் நெகிழ்வான குரலைக் கேட்டதும் மனதை என் னவோ செய்கிறது.</p>
