“இந்தியாவில் பெயர் தான் எல்லாமே”!!
13 Dec 2025, 1:22 pm
<p><strong>“இந்தியாவில் பெயர் தான் எல்லாமே”!!</strong></p>
<p>“நீங்கள் எல்லாரும் 2019-ல் தான் social distance என்கிற வார்த்தையை கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், நாங்கள் 2000 ஆண்டுகளாகவே social distance-ல் தான் இருந்து வருகிறோம்” “இங்கு பிறப்பு தான் எல்லாவற்றையுமே தீர்மானிக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு எல்லாவற்றையுமே பிறப்பு தான் முடிவு செய்கிறது. நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் கூட, என்னைப் போலவே “இந்த பிறப்பின் அடிப்படையிலான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவே அனுமதிக்கப் பட்டிருக்கிறேன்” “கேட்டால், முன் ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு தான் இப்போது இப்படி பிறந்திருக்கிறேன் என்பார்கள்” “இந்த வைரஸை அழிக்க இங்கு எந்த Vaccine-னும் கண்டுபிடிக்கப்படவில்லை” “உண்மை என்னவென்றால், இதில் என்மீது எந்த தவறுமே இல்லை.. இந்த சாதியை புத்திக்குள் வைத்துக்கொண்டு, என்னை தள்ளி வைத்து பார்ப்பவர்கள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள்” என்று ஒவ்வொரு வார்த்தையிலும் இந்திய சமூகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் நீரஜ் கெய்வான்.. ஜெர்மனியில் ஹிட்லர் செய்த படுகொலைகள் குறித்து இன்று வரை திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளன.. அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைகள் பற்றி இன்று வரை திரைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. உலக இயக்குநர்கள் இனி இந்தியாவை பார்க்க வேண்டும்.. இந்தியாவில் நிலவுகிற 2000 ஆண்டுகால அவலமான சாதிய இழிவுகளைக் குறித்து அவர்கள் திரைப்படங்கள் உருவாக்க வேண்டும்.. உலக அரங்கில் இந்தியாவின் போலி முகத்திரை கிழித்தெறியப் பட வேண்டும்.. அதற்கு நீரஜ் கெய்வான், மார்டின் ஸ்கார்சீஸ் இணைந்திருப்பது ஒரு புதிய தொடக்கமாக இருக்கட்டும்!!</p>
