விளையாட்டு
26 May 2026, 10:40 pm

வலுவான அதிரடியில் மிரட்டும் நமன் தீர்

இந்த ஆண்டு ஐபிஎல் சீச னில் மும்பை அணியில் அனைவரும் நன்றாக விளையாடினா லும், அந்த அணி வெற்றிகளில் சொதப்பி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி யது. மும்பை அணியின் ஆட்டத்தில் பெரி யளவு மாற்றம் ஏற்படாத சூழலில், நமன் தீர் மட்டும் உறுதியான, வலு வான அதிரடி ஆட்டம் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கவனத்தை ஈர்த்துள்ளார். பேட்டிங்கில் 3ஆவது வீரராக களமிறங்கும் நமன் தீர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் போன்று, பயமில்லா அதிரடிக்கு பெயர் பெற்றுள்ளார். பெரியளவில் ரன் குவிக்கவில்லை என்றாலும், கணிப்பு, வலுவான ஷாட்கள் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். பொதுவாக கிரிக்கெட் உலகில் தன்னை நோக்கி வரும் இந்த பந்தை, இந்த திசை பக்கம் நகர்த்திவிடலாம் என வீரர்கள் கணக்கு போடுவார்கள். ஆனால் நமன் தீர் தன்னை நோக்கி வரும் பந்தை எந்த திசை நோக்கியும் வலுவான ஷாட் மூலம் திருப்ப முடி யும் என வித்தியாசமான அதிரடியில் மிரட்டுகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் ஒவ்வொரு ஆட்டத்திலும் குறுகிய காலமே நமன் தீர் பேட்டிங் செய்தாலும், பந்துகளை வீணடிக்கா மல் ரன்ரேட் குறையாமல் விளையாடி யுள்ளார். 12 இன்னிங்சில் விளையாடி யுள்ள நமன் தீர் 147.22 ஸ்டிரைக் ரேட்டுடன் 312 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணிக்கு... ஹரியானா மாநிலத்தில் பிறந்து பஞ்சாப் மாநில அணிக்காக விளை யாடி வரும் நமனுக்கு 26 வயது தான் ஆகிறது. பந்துவீச்சு, பீல்டிங்கிலும் ஜொலிக்கும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் காத்தி ருக்கின்றன. ஆனால் நம் நாட்டின் தேசிய தேர்வுக்குழு உலப்பல் இல்லா மல் தனது வேலையை செய்தால் நமன் தீர் இந்திய அணியில் விரைவில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது சிக்கலான விசயம் தான். நமன் தீர் டி20 அணியில் மட்டுமே இடம்கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் டி20 பிரிவில் அணியில் இடம் கிடைக்கா மல் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் வரிசையில் நிற்கின்றனர். இதனால் நமன் தீருக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்காது என்ற சூழல் உள்ளது.

மும்பை அணியின் தோல்வியை குறிப்பிட்டு மாணவர் ‘மோட்டிவேஷன்’ பேச்சு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் பட்டமளிப்பு விழாவின் போது மாணவர் ஒருவர் மேடையில், “நமது அன்பிற்குரிய மும்பை இந்தியன்ஸ் அணியைப் போல நாமும் வாழ்க்கையில் சில கடினமான மோசமான காலங்களைச் சந்திப்போம். ஆனால் அதிலிருந்து மீண்டு வர வேண்டும்” என்று அவர் பேசினார். ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி முன்னிலையிலேயே அணியின் மோசமான தோல்விகளைப் பற்றியும், அதிலிருந்து அணியும் நாமும் மீண்டு வர வேண்டும் என்ற மாணவரின் பேச்சுக்கு வரவேற்பு குவிந்து வருகிறது. குறிப்பாக மாணவர் பேசும் போது நீதா அம்பானி (அம்பானி மனைவி) சத்தமாக கண்ணை, முகத்தை மூடிக்கொண்டு சிரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் : இன்றைய எலிமினேட்டர் ஆட்டம்

ஹைதராபாத் - ராஜஸ்தான் இடம் : முல்லன்பூர், பஞ்சாப் / நேரம் : இரவு 7:30 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)