முந்தய பக்கம்

மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

29 Sept 2026, 11:18 pm
மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

நாமக்கல், செப்.29-நாமக்கல் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 26 வயது இளைஞரின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த கவிதா - சடையப்பன் தம்பதியரின் மகன்தீபக் வயது 28. கடந்த 16 ஆம் தேதியன்று கீரம்பூரில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றுவிட்டு, வெள்ளக்கல்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். புதுச்சத்திரம் அருகே தனியார் கல்லூரி பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த பேட்டரி கார் மோதியதில் தீபக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

அங்கு கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் தீபக் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திங்களன்று அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். தீபக்கின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, கண்கள், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதில் நுரையீரல் மற்றும் இதயம் சென்னைக்கும்,சிறுநீரகங்கள் கோவைக்கும், மருத்துவ அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. மகனை இழந்ததுயரிலும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து பலரது உயிரைக் காப்பாற்ற பெற்றோர் முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram