குடிநீர் பற்றாக்குறை - விலை கொடுத்து வாங்கும் அவலம்!
17 Jul 2026, 11:37 pm
<p><strong>குடிநீர் பற்றாக்குறை - விலை கொடுத்து வாங்கும் அவலம்! </strong></p><p>நாமக்கல், ஜூலை 17- திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம், சக்தி நாயக்கன்பாளையம் ஊராட்சி கோவில்பாளை யம் மேற்குப் பகுதி அம்மன் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக நிலவும் குடிநீர் பற்றாக்குறையால், பொதுமக்கள் தலா ரூ.2,000 வரை சொந்தப் பணத்தை செலவழித்து லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தும் அவதிக்குள்ளாகி னர். இப்பகுதியில் கடந்த ஒன்றரை மாத கால மாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீர் குழாய்கள் சரி செய்யாமல் ஊராட்சி நிர்வாகத் தினர் காலம் தாழ்த்தி வந்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் தலைமையில் வெள்ளியன்று எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு காலிக்குடங்களுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத் தில் முன்னாள் கவுன்சிலர் சு.சுரேஷ், மூத்த தலைவர் சி.சுந்தரம், விவசாயத் தொழிலா ளர் சங்க கிளைச் செயலாளர் ஜெயந்தி, செயற்குழு உறுப்பினர் ஜமுனா உள்ளிட் டோர் பங்கேற்றனர். தகவலறிந்து வந்த வட்டார துணை அலுவ லர் பெரியசாமி, ஊராட்சி செயலாளர் சரவ ணன் ஆகியோர் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். தற்காலிகமாக லாரி கள் மூலம், சனிக்கிழமை முதல் தினசரி குழாய்கள் மூலமும் முறையாக குடிநீர் விநி யோகிக்கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்ததை அடுத்து போராட்டம் கைவிடட் பட்டது.</p>
