தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ழவர் சந்தை அருகே கடைகள் நடத்த அனுமதி கோரி வியாபாரிகள் மனு; எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு

15 Jun 2026, 11:58 pm
ழவர் சந்தை அருகே கடைகள் நடத்த அனுமதி கோரி வியாபாரிகள் மனு; எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு
<p><strong>உழவர் சந்தை அருகே கடைகள் நடத்த அனுமதி கோரி வியாபாரிகள் மனு; எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு</strong></p><p>நாமக்கல், ஜூன் 15– நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கூட்டத் தில் நாமக்கல் உழவர் சந்தை அருகே பல ஆண்டுகளாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்து வரும் தெருவோர சிறு வியாபாரி கள், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடைகள் நடத்த அனு மதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதேவேளை, சாலையோர வியா பாரத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என உழவர் சந்தை விவசாயிகள் தனியாக மனு அளித்த தால் பரபரப்பு ஏற்பட்டது. பூங்கா சாலையில் ஏழு ஆண்டு களுக்கும் மேலாக வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகள், தாங்கள் நேரடியாக தோட்டங்கள் மற்றும் பண்ணைகளில் இருந்து காய்கறி, பழங்களை வாங்கி வந்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர். மேலும், பூங்கா சாலை ஒருவழிப் பாதையாக இருப்பதால் போக்கு வரத்திற்கோ, பொதுமக்கள் நட மாட்டத்திற்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினர். தெருவோர வியாபாரமே தங்க ளது குடும்பங்களின் முக்கிய வாழ் வாதாரமாக இருப்பதால், எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து கடை கள் நடத்த அனுமதி வழங்க வேண் டும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, உழவர் சந்தையில் கடை நடத்தி வரும் விவசாயிகளும் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், விவசாயிகள் அல்லாத சிலர் வெளிமார்க் கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து சாலையோரத்தில் விற்பனை செய்வதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும், உழவர் சந்தை விவசாயிகளுக்கு முன்னு ரிமை வழங்கி, சாலை ஆக்கிரமிப்பு வியாபாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இரு தரப்பினரும் ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கோரிக்கை கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.