தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அங்கீகாரம் இல்லாத பள்ளியை காலி செய்ய அதிகாரிகள் நிர்பந்தம்: அதிகாரிகளை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

21 May 2026, 12:30 am
அங்கீகாரம் இல்லாத பள்ளியை காலி செய்ய அதிகாரிகள் நிர்பந்தம்: அதிகாரிகளை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

அங்கீகாரம் இல்லாத பள்ளியை காலி செய்ய அதிகாரிகள் நிர்பந்தம்: அதிகாரிகளை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

நாமக்கல், மே 20- அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளியை அதிகாரிகள் காலி செய்ய நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டி பெற்றோர்கள் முற்றுகையிட் டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் - திருச்செங்கோடு சாலை, ஜீவா செட் பகுதியில் கோல்டன் மழ லையர் தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது.

இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ப்ரீ கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வரும் நிலையில், பள்ளி முறையான அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகி றது.

இந்நிலையில் இப்பள்ளியின் அருகிலேயே எஃப் எல் 2 தனியார் மதுபானக்கடை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இதற்கு சாசகமாக அதிகாரிகள் செயல்ப டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், செவ்வா யன்று பள்ளிக்கு வருகை தந்த நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரி சாந்தி, வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் காவல் துறை அதி காரிகள் பள்ளிக்கு முறையான அங் கீகாரம் இல்லாததால் உடனடியாக பள்ளியை காலி செய்ய வேண் டும் என பள்ளி நிர்வாகத்திடம் தெரி வித்தனர்.

வேறு ஒரு இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் குறைந்த பட்சம் ஒரு ஆறு மாத காலங் கள் கால அவகாசம் வழங்க வேண் டும் என்று பள்ளியின் தரப்பில் தெரி விக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதி காரிகள், பள்ளி கட்டிடம் பழு தடைந்து உள்ளதால் குழந்தைக ளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக இடத்தின் உரிமையா ளர் கூறுகிறார்.

எனவே உடனடியாக பள்ளியை காலி செய்ய வேண்டு மென நிர்பந்தம் செய்தனர்.

இதனை யடுத்து அங்கு திரண்ட பள்ளியில் பயி லும் குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளியை உடனடியாக காலி செய்ய சொன்னால் எங்கள் பிள்ளைகளை வேறு எந்த பள்ளியில் இதற்கு மேல் நாங்கள் சேர்க்க முடியும்? எனவே குறைந்தபட்சம் ஆறு மாத காலம் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய் யும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும், என கேட்டுக் கொண்ட னர்.

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த இடத்தின் உரிமையாளர், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளி இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் குழந்தைகளுக்கு பாது காப்பு இல்லாத நிலை ஏற்படும்.

மேலும் ஏதேனும் அசம்பாவித சம்ப வங்கள் ஏற்பட்டால் நிலத்தின் உரிமையாளரான நானே அதில் பாதிக்கப்படுவேன்.

எனவே இந்த பள்ளியில் யாரும் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து நிலத்தின் உரிமையாளருடன் சமரசம் பேச்சு வார்த்தை நடத்தி ஆறு மாத காலங் களுக்கு கால அவகாசம் பெறுவது, உடனுக்குடனே பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நட வடிக்கையில் பள்ளி நிர்வாகம் ஈடுபட வேண்டும் என அரசு அதிகாரி கள் அறிவுறுத்தல் வழங்கினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.