முந்தய பக்கம்

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

22 Jul 2026, 10:49 pm
போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாமக்கல், ஜூலை 22- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் நாமக்கல் பணி மனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை தொடர் பணி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. அனைத்து ஊழியர்களுக்கும் வார விடுப்பு வழங்க வேண்டும். வண்டிகளை பழுது பார்க்கும் தொழில் நுட்ப பணியாளருக்கு தேவையான டூல்ஸ் மற்றும் தர மான உதிரி பாகங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சேலம் கோட் டம், நாமக்கல் கிளை சார்பில் நாமக்கல் பணி மனை முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற் கூட்டம் புதனன்று நடைபெற்றது. இதில், சங்க நிர்வாகிகள் கலைச்செல்வன், செந்தில்குமார், ராசிபுரம் கிளை செயலாளர் ரவி, திருச்செங்கோடு கிளைச் செய லாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி பேசினார். சங்க கோட் டத் தலைவர் செம்பான், பொதுச் செயலாளர் கிருஷ் ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறை வாக, நிர்வாகி சிவக்குமார் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram