முந்தய பக்கம்

டிராக்டர்களுக்கு தீ வைப்பு

31 May 2026, 11:12 pm
டிராக்டர்களுக்கு தீ வைப்பு
<p><strong>டிராக்டர்களுக்கு தீ வைப்பு</strong></p><p>நாமக்கல், மே 31- பரமத்தி வேலூர் அருகே கரும்பு ஆலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிராக்டர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞரும், விவசாயியுமான துரைசாமி (60), வி.புதுப்பாளையம் செல்லும் சாலையில் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். கரும்புகளை ஏற்றி வருவதற்காக அவர் இரண்டு டிராக்டர்களை பயன்படுத்தி வந்துள் ளார். இந்நிலையில், வெள்ளியன்று இரவு ஆலை கொட்டகை அருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு டிராக் டர்களும் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீப்பற்றி எரிந் தன. இதைக்கண்ட தொழிலாளர்கள் உடனடியாக துரைசாமிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற அவர், இரண்டு டிராக்டர்க ளும் தீயில் எரிந்து சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதுகுறித்து துரைசாமி அளித்த புகாரின் பேரில் ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்திருக் கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram