முந்தய பக்கம்

குடிநீர் வசதி கோரி மறியல்!

4 Nov 2026, 12:06 am
குடிநீர் வசதி கோரி மறியல்!

குடிநீர் வசதி கோரி மறியல்!

நாமக்கல், நவ.3-முறையான குடிநீர் வசதி கோரி வீரகுட்டை பிரிவில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில், மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்க அதிகாரிகள் உறுதியளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள பிரிதி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில், கடந்த ஒரு மாதமாக போர் மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்று நீரும் முறையாக கிடைக்காததால் பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்தனர்.இதனால், திங்களன்று அண்ணா நகர் பகுதியைசேர்ந்த திரளான பொதுமக்கள், வீரகுட்டை பிரிவில் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்த்து, முறையான குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்மதி மற்றும் திருச்செங்கோடு ஊரக காவல் உதவி ஆய்வாளர் செல்லதுரை ஆகியோர்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பழுதடைந்த மோட்டாரை சீரமைத்து குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள்சாலை மறியலை கைவிட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram